நூல்களை எழுதும்
புலவர்கள்-எழுத்தாளர்கள்-அறநெறிகளைக்
கூறும்நூல்களையே
செய்யவேண்டும்; மக்களை நன்னெறிப்
படுத்தும்
நூல்களையே எழுத
வேண்டும்; இதுவே
மக்களுக்கு நன்மை செய்வதாகும்;
நூலாசிரியர்களும் நன்மை பெறும் வழியாகும்.
இதனை
‘‘அறநெறி,
சேர்தற்குச் செய்க பெருநூலை’’ என்று கூறியிருப்பதனால்
காணலாம். செய்க
என்பதற்குக் கற்க என்று பொருள் கூறுவர். இதைவிட
இயற்றுக என்று பொருள்
கூறுதல்சிறந்ததாகும்.
விலைமாதர்களின் சொற்களை
நம்பக்கூடாது. அவர்களின் இன்பத்தை
விரும்புவதால்
துன்பந்தான் உண்டாகும்.
பிறர் மனைவியை விரும்புதல்
குற்றமாகும்.
இவைபோன்ற கருத்துக்களும் பல
பாடல்களிலே காணப்படுகின்றன.
நம்பிக்கைகள்
அருந்ததியே சிறந்த
கற்புடையவள்; கற்புள்ள மகளிர்க்கு அருந்ததியே
உதாரணம்.
நான்கு வேதங்களையும் அறிந்த
வேதியர்கள் சொல்லும் அறங்களைப்
பின்பற்றி
நடப்பதே நல்லொழுக்கமாகும்.
கூற்றுவன் ஒரு தெய்வம்; அவன்
உயிர்களைக் கவர்ந்து செல்வான்.
குடிகளைத் துன்புறுத்தி வரி
வாங்கும் அரசன்; பொய் பேசும் மக்கள்;
குடும்பத்திலிருந்து கொண்டே விபசாரம் செய்யும் பெண்;
இவர்கள் உள்ள
நாட்டில் மழை
பெய்யாது.
|