நீண்ட கூந்தலையுடைய
பெண்ணே! நிலத்திலே நீர் தங்கும்படி கரை
உயர்ந்திருக்கவேண்டும்;
கரை உயரமாயிருந்தால்தான் நிலத்திலே தண்ணீர்
தங்கி நிற்கும்; தண்ணீர் தேங்கி நின்றால்தான்
பயிர் செய்யப்படும் நெற்பயிர்
ஓங்கி வளரும்; நெய்பயிர்
ஓங்கி வளர்ந்தால்தான் குடிமக்கள் உணவுப்
பஞ்சமின்றிச் செல்வங்கள்
எல்லாம் பெற்று உயர்ந்து
வாழ்வார்கள்.
குடிமக்கள்
உயர்வாக வாழ்ந்தால்தான் அரசன்
உயர்வாக வாழ்வான்.
(அரசாட்சி
சிறப்படையும்)’’ (பா.46)
நாட்டிலே உணவுப் பொருள் உற்பத்தி பெருகுவதற்கான முயற்சியிலே
அரசாங்கம் முதலிலே ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் பஞ்சம்
தலைகாட்டாது; நாட்டில் அமைதி நிலைக்கும்; மக்களிடம் ஒற்றுமைக்
குறைவும்,ஒழுக்கக் கேடும் தோன்றமாட்டா; மக்கள் அனைவரும் மகிழ்ந்து
வாழ்வார்கள்.இது எக்காலத்திலும் எந்த அரசாங்கமும் கண்ணும்
கருத்துமாகச் செய்யவேண்டிய கடமையாகும்.
தேசத் தொண்டு
மழை குறைந்த நாடுகளில் மரம் வளர்க்கவேண்டும் என்னும் கிளர்ச்சி
இன்று வலுத்து வருகின்றது. இருக்கும் காடுகளை அழித்துவிடக்கூடாது;
அவைகளைப் பாதுகாக்கவேண்டும்; நாடெங்கும் புதிய மரங்களை
வளர்க்கவேண்டும் என்ற உணர்ச்சி எல்லா நாடுகளிலும்
தலையெடுத்திருக்கின்றது. பண்டைய இலக்கியங்களிலே செடிநட்டு மரம்
வளர்ப்பதை ஒரு கடமையாகக் கூறியிருக்கின்றனர். திருமணச் சடங்கில்,
இறுதியில் மரம் நடுவதையும்
|