பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
134

புணர

புணர்மொழிப் பொருள் வேறுபாடுகளும்; அறிதற்பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்குமேற் புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க'' என்று சிறப்புக் குறிப்பு வரைந்தார்.

    இனி, சங்கர நமச்சிவாயரோ, "எல்லா வெழுத்தும் பல்வேறு வகைப்பட வரைந்து வழங்கும் பழைய வடிவினையுடையவாம். அவ் வடிவினவாய் வழங்குமிடத்து, தனித்தும் உடம்பூர்ந்தும் வரும் எகரமும் ஒகரமுந் தனிமெய்களும், இயல்பாய புள்ளியைப் பிற்காலத்து ஒழித்து வரைந்து ஏகார ஓகாரங்களோடும் உயிர்மெய்களோடும் ஐயப்பட வழங்கும் வழக்கினை யுடையவன்றி, துணியப்படுந் தொல்லை வடிவினது உறுப்பாய புள்ளியைப் பெறும்'' என்று நூற்பாவின் பிற்கூற்றை விளக்குவார் போன்று இடைக்கால நிலைமையைச் சுட்டி விரித்துரைத்தார். இவர் காலம் 18ஆம் நூற்றாண்டு.

    இவரெல்லாரும் இவ்வாறு வெவ்வேறு வகையில் ஒரே கருத்துப்பட வுரைக்க, இராமானுசக் கவிராயரோ வெனின்,

     தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்(டு)
     எய்தும்ஏ காரம்ஓ காரமெய் புள்ளி

என்று நூற்பாவையே மாற்றியமைத்து,

    "எல்லா எழுத்துகளும் பலவேறு வகைப்பட எழுதி வழங்கும் பழைய வடிவையே யுடையனவாம். அவ்வாறு வழங்குமிடத்து, ஏகார ஓகாரங்களும் தனி மெய்களும் பழைய புள்ளியைப் பெறும்.

    சந்தேகப்பட வழங்கிவந்தன ரென்பதாயிற்று.

    வரலாறு: எ, ஏ; ஒ, ஓ; கெ, கே; கொ; கோ; க், க; ங், ங என வரும். மற்ற வுயிர்மெய்களுந் தனிமெய்களும் இவ்வாறே புள்ளி பெறுமெனக் காண்க. தொல்லாசிரியர் முதலாயினோர்

     பழையன கழிதலும் புதியன புகுதலும்
     வழுவல கால வகையி னானே

என்றும், "இறந்தது விலக்கல் எதிரது போற்றல்'' எனவுங் கூறினமையால், 'ஏகாரம் ஓகார மெய் புள்ளி பெறும்' எனத் திருப்பவேண்டிற்று. என்னெனின், இக்காலத்தார் ஏகார ஓகாரங்களுக்கே புள்ளியிட்டெழுவது பெரு வழக்காயினமையா லென்க.''

என்று உரை வரைந்திருப்பது, பெரிதும் போற்றத்தக்கதாம். இவர் காலம் 19ஆம் நூற்றாண்டு.

    முதுகுடுமிப் பெருவழுதி காலத்திற்குப்பின், தமிழ்க் காப்பும் கல்வெட்டுத் தொடர்பும் தமிழத் தமிழ்ப் புலவர் கையினின்று கடந்து விட்டமையாலும், போற்றுவாரின்றிப் புலவர் மரபு வரவர அருகி வந்தமை யாலும், வீரமாமுனிவர் காலத்திற் (18 ஆம் நூற்றாண்டு) புலமையில்லாதவர் படியெடுக்கவும் ஓலையெழுதவும் நேர்ந்துவிட்டமையால், குறில் நெடிலாகவும் மெய் உயிர்மெய்யாகவும் படிக்க முடியாவாறும் படிப்பார்க்குப்