18
18. உயிர்மெய் வரிவடிவுகளின் ஓரியலின்மை
தொடக்க வகுப்பில் எழுத்து எழுதிப்
பயிலும் சிறுபிள்ளைக்கு, க, கா; ங, ஙா; ச, சா; ஞ, ஞா; ட, டா என்று எழுதிக்காட்டி, ணவ்விற்கு
அடுத்த எழுத்தை எழுதச் சொன்னால், `ணா' என்றுதான் எழுதும். இதனால், ஓரியலாக எழுதுவதே இயற்கை
யென்றும், முந்திய வகையென்றும், சிறுபிள்ளைக்கும் சொல்லாமலே தெரியும் என்றும், அறிந்துகொள்ளலாம்.
இவ் வியற்கை முறையை மாற்றி ஏன்
' ணா ' என்று எழுதினர் முன்னோர் அல்லது இலக்கண ஆசிரியர் எனின், கூட்டெழுத்தில் அல்லது விரைவெழுத்தில்
ணவ்வடிவுங் காலுஞ் சேர்த்தெழுதின், காலும் ஒரு கோணச் சுழிபோல் தோன்றி ணகர ஆகாரத்தை இரு
னகரமாகக் கருதி மயங்க இடந்தரு மாதலின், அதை நீக்குதற்கே என்க.
இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒள என்னும்
ஏழுயிரும் ஏறும் ணகர மெய் வடிவுகள், அத்தகைய மயக்கத்திற்கு இடந்தராமையால், தி, தீ, து, தூ,
தெ, தே, தௌ என்பன போன்றே ணி, ணீ, ணு, ணூ, ணெ, ணே, ணௌ என்று இயற்கையான முறையில் எழுதப்படுகின்றன.
ஐகார வுயிர்மெய்க்கு னகரம்போல்
தோன்றும் இரட்டைக் கொம்பும், ஒகர ஓகாரமெய்கட்குக் கொம்புங் காலும், இயற்கை முறையில் வரின்,
பல சுழிகள் போல தோன்றி மேற்கூறிய மயக்கத்தை மிகுக்குமாதலின், அவ் வுயிர் மெய்கள் ணை,
ணொ, ணோ என்று வேறுபட்ட வடிவில் எழுதப்படு கின்றன.
இரு அல்லது முக்கோணச் சுழியெழுத்துகள்
போன்றே இருவளை வுள்ள எழுத்துகளும் சிலவிடத்து மயக்கந் தருவனவா யிருத்தலால், அத்தகைய இடங்களில்
அவையும் இயற்கைக்கு மாறான வடிவில் எழுதப்படுகின்றன.
றகர வடிவு இருவளைவுள்ளதா
யிருந்தும், ஏன் ஐகார வுயிர்மெய் வடிவில், றை என்றே இயற்கை வடிவில் எழுதப்படுகின்ற தெனின்,
அதற்குக் கோடு கீழிறங்கியிருப்பதால் மயக்கத்திற்கிடமில்லாது தடுக்கின்ற தென்க. இதனால்,
இன்றியமையாத இடங்களிலேயே ஐகார வுயிர்மெய்க்குக் கொக்குக் கழுத்துப் போன்ற மேற்கொடுக்குக்
கொண்டிருக்கின்றனர் என்பதை அறிக.
|