இயற
இயற்சொற்களினின்றும் திரிசொற்களும்
தொடர்ச்சொற்களும் ஆக்குமாறு அவரறிந்தாராயின் அங்ஙனம் கருதார். ஒவ்வொரு மொழியினும் பிறமொழியைச்
செவ்வையாய் மொழிபெயர்ப்பது அரிதாகும். ஆயினும், தமிழில் ஏனையவற்றிற்போல் அத்துணை அரிதன்று.
இதுபோது நூல் வழக்கினும் உலக வழக்கிலுமுள்ள தமிழ்ச்சொற்களையே தமிழ்மக்கள் அறிந்திலர்.
தமிழுக்கு வடமொழி யுதவி வேண்டாதிருக்க,
வடசொல்லை யேன் தமிழிலக்கணங் கூறவேண்டுமெனின், வடமொழி தமிழுக்கு இடத்தால் அணித்தாதலின்
போக்குவரவுபற்றியும் மொழிபெயர்ப்புப்பற்றியும் வடமொழியிலுள்ள நூற்பெயர்களும் ஆட்பெயர்களுமாய்த்
தமிழில் வந்து வழங்கிய சிறப்புப் பெயர்களே வடசொல்லெனப் பட்டனவென்றும், மொழி வழக்கிற்கும்
கருத்தறிவிப்பிற்கும் வேண்டிய பிற பொதுச்சொற்கள் தமிழில் வந்து வழங்குமாறு கூறப்பட்டிலவென்றும்
பண்டை நூல்களெல்லாம் வடமொழி விரவாத செந்தமிழ் நூல்களென்றும் கூறிவிடுக்க.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் |
|
............................................................. |
|
......................................திசைச்சொல் |
(நள்.
273) |
எனவே, செந்தமிழ் நாட்டை நாற்றிசையும்
சூழ்ந்த பன்னிரு கொடுந் தமிழ்நாடுகளினின்று வந்து வழங்கும் கொடுந்தமிழ்ச் சொற்களே திசைச்
சொற்களென்றும், பிறமொழிச் சொற்கள் தமிழுக்கு வேண்டுவ வல்லவென்றும், ஒருகால் வேண்டினும்,
வடசொற்போல அவ்வம் மொழியாற் குறிக்கப் படுமென்றும், அறிந்து கொள்க.
11. எதிர்மறையும்மை
"சாத்தன் வருதற்கு முரியன் என்பது
வாராமைக்கு முரியன் என்னும் எதிர்மறையை ஒழிபாக வுடைத்தாய் நிற்றலின், எதிர்மறையும்மை" என்றார்
சேனாவரையர்.
அதையே, "சாத்தன் வருதற்கு முரியன்
என்பது வாராமைக்கும் உரியனென எதிர்மறையை ஒழிபாக உடைத்தாய் நிற்றலின், எதிர்மறை. இஃது "அஃறிணை
விரவுப்பெய ரியல்புமா ருளவே" எனப் பண்புபற்றியும் வரும். இது பிறிதோர் பொருளைத் தழுவாது ஒரு
பொருளின் வினையை மறுத்து நிற்றலின் எச்சத்தின் வேறாயிற்று. மேல் ஆசிரியர் 'எதிர்மறை எச்சம்'
என்றமையின் இஃது எச்சத்தின் கூறாகும்" என்று விரித்துக் கூறினார் நச்சினார்க்கினியர்.
இதே உதாரணத்தை ஏனைச்
சிற்றிலக்கணத்தா ரெல்லாரும் வழிவழி காட்டி வந்தனர்.
|