பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
19

3

3. உரிச்சொல் விளக்கம்
 

     உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை  
     இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்  
     பெயரினும் வினையினும் மெய்தடு மாறி  
     ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்  
     பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும்  
     பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்  
     தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்  
     எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்

(தொல். 782)

என்பது தொல்காப்பிய உரிச்சொல் இலக்கணச் சூத்திரம்.

    இதற்கு, 'இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர்' என்று சேனாவரையர் உரை கூறியுள்ளார். இதனால் சேனாவரையர் காலத்திலேயே உரிச்சொல் செய்யுட்குரிய சொல் என்று ஒருவரோ பலரோ உரை கூறியுள்ளதாகத் தெரிகின்றது.

    நால்வகைச் சொற்களில் பெயர், வினை, இடை என்ற மூன்றே இலக்கண வகைச் சொற்களாகும். உரிச்சொல்லென்பது ஓர் இலக்கியவகைச் சொல்லே யன்றி இலக்கணவகைச் சொல்லன்று.  அது பெயராகவு மிருக்கும், வினையாகவு மிருக்கும் ,  இடையாகவு மிருக்கும்.   

     எ-டு:

    பெயர்

வினை

இடை

     
     மாலை (இயல்பு) வார்தல் (நீடல்) பே - அச்சக்குறிப்பு
     எறுழ் (வலி) இரங்கல் (வருந்தல்) ஐ  - வியப்புக்குறிப்பு
     பண்ணை (விளையாட்டு) பாய்தல் (பரத்தல்).  

    சேனாவரையரும் 'கறுப்பு, தவ வென்பன பெயர் வினைப்போலி. துவைத்தல், துவைக்கு மென்பன பெயர் வினைக்கு முதனிலையாயின'    என்று கூறியுள்ளார்.

    சூத்திரத்தில், இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றல், பெயரி னும் வினையினும் மெய்தடுமாறல், ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமையும்