பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
21

இன

    இனி, ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட்  குரிமையும் ஒவ்வோர் சொல்லிலுமுள்ள பலபொரு ளொருசொல்லும் ஒருபொருட் பலசொல்லுமாகும்.

    வேழம் என்பது கரும்பு, மூங்கில், யானை என்று பலபொருள்படும் பலபொரு ளொருசொற் பெயர்.

    வரைந்தான் என்பது எழுதினான், மணந்தான், நீக்கினான் என்று பல பொருள்படும் பலபொரு ளொருசொல் வினை.

    கொன் என்பது அச்சம், பயனின்மை, காலம், பெருமை எனப் பல பொருள்படும் பலபொரு ளொருசொல் இடை.

    தாவு என்பது வலி, வருத்தம் எனப் பலபொருள்படும் பலபொரு ளொருசொல் உரி.

    வேழம், கைம்மலை, ஓங்கல் என்பன யானையைக் குறிக்கும் ஒருபொருட் பலசொற் பெயர்.

    நீக்கினான்,  அகற்றினான்,  விலக்கினான் என்பன ஒருபொருட்  பலசொல் வினை.

    ஆ, ஏ, ஓ என்பன வினாப் பொருளில் வரும் ஒருபொருட் பலசொல்  இடை.

    சால, உறு, தவ, நனி என்பன மிகுதிப் பொருளை யுணர்த்தும்  ஒருபொருட் பலசொல் உரி.

    ஒருபொருட் பலசொல், பலபொரு ளொருசொல் என்பன  திரிசொற் பாகுபாடுமாகும்.

     ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்  
     வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்  
     இருபாற் றென்ப திரிசொற் கிளவி

(தொல். 882)

என்பது தொல்காப்பியம். ஆகவே மேற்கூறிய மூன்றும் உரிச்சொல் லிலக்கண மன்மை பெறப்படும்.

    இனி உரிச்சொல் இலக்கணம் யாதெனின்,

     பயிலாத வற்றை........பொருள்வேறு கிளத்தல்

(தொல். சொல். 297)

என்பதேயாம். இதற்கு,

    'கேட்பானாற் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றோடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய  நிலைக்களத்தின்கண் யாதானு மொரு சொல்லாயினும் வேறுவேறு பொருளுணர்த்தப்படும் என்றவாறு' என்று   சேனாவரையரும்,

    'பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்' என்பது உரிச்சொற்கள் தத்தம் மரபினாற் சென்று நிற்குமிடத்து,