New Page 1
சொற்களையும் எடுத்துக் கூறும். நிகண்டுகள்
உரிச்சொல் லகராதிகள் அல்லது செய்யுட்சொல் லகராதிகள் என்பதை,
இன்ன தின்னுழி யின்னண மியலும் |
|
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் |
|
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலாம் |
|
நல்லோ ருரிச்சொலி னயந்தனர்
கொளலே |
(நன்.
460) |
என்னும் நன்னூல் உரியியற்
புறனடைச் சூத்திரத்தானு முணர்க. உரிச்சொல் நிகண்டு என்றே ஒரு நிகண்டுமுள்ளது. அகராதி என்பது
அகரமுதற் சொற்களைக் கூறுவதென்றே பொருள்படினும், இனவிலக்கணமாக நிகண்டிற்கும் பெயராகக்
கொள்ளப்படும்.
இங்ஙனம் உரிச்சொல் செய்யுட்
சொல்லா யிருக்கவும், 'உரிச்சொல்' என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும்
பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானே யன்றே ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்,பலசொல்
ஒருபொருட் குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர். எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச்சொற்
கிளவி என்று ஓதினமையால், வடநூலாசிரியர் தாது என்று குறியிட்ட சொற்களே இவை யென்று
கொள்ளப்படும், அவையும் குறைச்சொல் லாதலான். அஃதேல், தொழிற் பொருண்மை உணர்த்துவன எல்லாம்
இதனுள் ஓதினாரோ எனின், 'வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல்
மேன' (சூ.2) என்றாராகலின், வழக்கின்கட் பயிற்சி இல்லாத சொற்கள் ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன
என்க.
'தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின்,
அவ் விருசொற்கும் அங்கமா.....ண்டுக் கூறப்படுகின்றன' என்றார் தெய்வச்சிலையார். இதையே
சிவஞான முனிவருந் தழுவினர்.
உரிச்சொல் தாது(வினைப்பகுதி)ஆயின்
தாதுவைக் குறியாது அலமரல், தெருமரல், கூர்ப்பு, வார்தல் என்று தொழிற்பெயர்களை ஏன் குறித்தல்
வேண்டும்?
தொழிற்பெயர் தமிழில் தாதுவைக்
குறிக்கும் வகைகளில் ஒன்றென்று கூறின்,
குரு, மல்லல், மழவு, பண்ணை, வம்பு,
தெவ், நாம், வாள், எறுழ் முதலிய பெயர்ச்சொற்கள் ஏன் காட்டப்படுகின்றன? பெயர்ச்சொற்கட்குப்
பிரதிபதிகமே யன்றித் தாதுவின்றே!
இனி, வினைச்சொற்களுள்ளும் பகுதிப்பொருள்
ஒன்றும், உரிச்சொற் பொருளொன்றுமா யிருத்தலின், பகுதியைக் கூறி என்ன பயன்?
செல்லல் என்னும் தொழிற்பெயர்
உரிச்சொல்லாகி இன்னாமையை உணர்த்தும்; செல் என்னும் பகுதி போதலையே உணர்த்தும்.
|