9
9. குற்றியலுகரம் உயிரீறே (1)
|
|
எழுத்தெனப் படுப, |
|
|
|
அகரமுதல் னகர இறுவாய் |
|
முப்பஃ தென்ப; |
|
சார்ந்துவரல் மரபின் மூன்றலங்
கடையே |
(தொல். 1) |
|
|
அவைதாம் |
|
|
|
குற்றிய லிகரம் குற்றிய லுகரம் |
|
ஆய்தம் என்ற |
|
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன |
(தொல்.
2) |
என்றார் தொல்காப்பியர்.
இரண்டாம் நூற்பாவில், குற்றியலிகரமும்
குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எனப் பிரித்துக் கூறாது "குற்றியலிகரம்
குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்" என்று 'முப்பாற் புள்ளி' என்பது மூவெழுத்தையும்
பொதுப்படத் தழுவுமாறு உம்மைத்தொகையாய்ச் சேர்த்துக் கூறியிருத்தலின், குற்றியலிகர
குற்றியலுகரங்களும் ஆய்தம் போலப் பண்டைக்காலத்திற் புள்ளி பெற்றன என்பதுணரப்படும்.
நூற்பாவில் 'முப்பாற்புள்ளி' என்பது,
புள்ளி பெற்ற மூவெழுத்து களையும் முப்புள்ளி வடிவான ஆய்தத்தையும் ஒருங்கே குறிப்பது ``ஆமா கோனவ்
வணையவும் பெறுமே'' என்னும் நன்னூல் நூற்பாவின் 'ஆமா' என்பது போன்ற இரட்டுறலாகும்.
தொல்காப்பிய மரபியல் நூற்பா
110-ல், 'வாரா ததனான் வந்தது முடித்தல்' என்னும் உத்தியுரையில்,
"குற்றியலிகரத்தைப் புள்ளியென்றலும்
ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி வந்துழி அவ்வாறு
ஆண்டானென்பது. இனிப் புள்ளியென மேல் ஆள வாராததனைப் புள்ளியென்று ஆள்வனவற்றோடு மயக்கங்
கூறுதலென்பது. 'அவைதாங் குற்றிய லிகரங் குற்றிய லுகர - மாய்த மென்ற - முப்பாற் புள்ளியு மெழுத்தோ
ரன்ன' (தொல்-எழுத்.-நூன். 2) என்புழிக் குற்றியலிகரம். புள்ளியென்று யாண்டும் ஆள வாராமையானும்
அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்ஙனம் புள்ளியென்று ஆள வருங் குற்றுகரத்
|