பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
74

என

எனவும் பெயர் தந்த தொல்லாசிரியர் இச் சார்பெழுத்துக்கும் உகரக் குறுக்கம் என்றன்றோ பெயர் தந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் பெயர் கூறக் காணோமே!"

    உயிரெழுத்துகள் பன்னிரண்டனுள், ஐ ஒள என்னும் இரண்டும் பிந்தி ஏற்பட்ட புணரொலிகள் (Diphthongs). அதனாலேயே, அவை தனியொலிகளான பிற நெடில்கள்போல் காரச் சாரியை பெறாது கான் சாரியை சிறப்பாகப்  பெற்றன. அவற்றிற்குக் காரச் சாரியையும் கொடுப்பது பிற்கால வழக்கு. குறிலுக்குக் கரமும் நெடிலுக்குக் காரமும் கொடுக்க வேண்டியதே நெறியாயினும், குறிலுக்கும் காரச்சாரியை கொடுப்பர் பிற்காலத்தார். இது வடமொழியைப் பின்பற்றின தவறான வழக்காகும். குற்றியலுகரமும் குற்றியலிகரமும் முந்தியே தோன்றியவை யாதலாலும், ஒழுங்குபட்டவை யாதலாலும், குறுகி இயல்கின்ற உகரம் என்றும் குறுகி இயல்கின்ற இகரமென்றும், பெயர் பெற்றன. இனிக் குறுகிய இயல்புள்ள இகர உகரம் என்றுமாம்.

     அகர இகரம் ஐகாரம் ஆகும்

(மொழி. 21)

   
     அகர உகரம் ஒளகாரம் ஆகும்

(மொழி. 22)

என்று கூறிய தொல்காப்பியரே,

     அகரத் திம்பர் யகரப் புள்ளியும்  
     ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

(மொழி. 23)

என்றும்,

     அகரத் திம்பர் வகரப் புள்ளியும்
     ஒளவென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

என்றும்,

     ஓரள பாகும் இடனுமா ருண்டே  
     தேருங் காலை மொழிவயி னான

(மொழி. 24)

என்றும், கூறியுள்ளார்.

    ஐகாரம் அய் என்றும் ஒளகாரம் அவ் என்றும் ஒலிக்கும்போதே, ஒன்றரையளபினவாகக் குறுகிவிடுகின்றன. இனி, இடையன், சடையன் போன்ற சொற்களின் இடையில், டகர ஐகான் டகரம் போல் ஒலித்து ஓரளபினதாகவும் குறுகிவிடுகின்றது.

    ஐகார ஒளகாரக் குறுக்கங்களைக் கூறும்பொழுதும்,

     அரையளபு குறுகல் மகரம் உடைத்தே  
     இசையிடன் அருகும் தெரியும் காலை

(நூன். 13)

என்று மகரக் குறுக்கத்தைக் கூறும்பொழுதும் அளபு குறுகுமென்றே கூறிச் செல்கின்றார் தொல்காப்பியர். இவற்றிற்க்கெல்லாம் குறுக்கமென்று பெயர் கொடுத்துச் சார்பெழுத்தாகக் காட்டியவர் நன்னூலாரே.