ஆய
ஆய்தம் ஒலியில் மட்டும் வேறுபட்டது;
அளபிற் குன்றியதன்று. அது ககரத்திற் கினமானதென்பது, அஃகேனம் என்னும் பெயரினாலேயே அறியப்படும்.
அஃது ஏனச் சாரியை பெறும்போது வேறெம் மெய்யோடும் புணராமை காண்க.
குற்றியலுகர குற்றியலிகரங்கள்;
முற்றியலுகர முற்றியலிகரங்கள் போல் பதினெண் மெய்யொடும் கூடி வருவனவல்ல. ஆய்தம் ஓருயி
ரொடும் கூடி வருவதன்று. ஐகார ஒளகாரங்கள் குறுகுவது இடம்பற்றியே யன்றிப் பற்றுக்கோடும்
சார்பும் பற்றியன்று. மகரக் குறுக்கம் 'போலும்', 'மருளும்" என்பன போன்ற சொற்களின் ஈற்றயல்
உகரக் கேட்டினாலும், வருஞ்சொன் முதல் வகரத்தினாலுமே, நிகழும்; வருஞ்சொன் முதல் உயிரேறின்
உகரக் கேட்டு மகரக்குறுக்கம் நீங்கிவிடும்.
எ-டு: போன்ம்+என்று=போன்மென்று. |
இத்தகைய வேறுபாடும் சிறப்பியல்பும்
நோக்கியே, முதனூலார் சார்பெழுத்து மூன்றே யெனக் கொண்டார். அதையே பல்லாயிரம் ஆண்டிற்குப்
பிற்பட்ட தொல்காப்பியரும் தழுவிக் கூறினர். எழுத்துகளின் தகையும் தொகையும் பெயரும் அளவும்
கூறும் எழுத்ததிகார முதலியலுக்கு நூன்மரபு என்று அவர் பெயரிட்டிருப்பதையும்,
எழுத்தெனப் படுப |
அகரமுதல் னகர இறுவாய் |
முப்பஃதென்ப |
சார்ந்துவரல் மரபின் மூன்றலங்
கடையே. |
என்று வழிநூன் முறையிற் கூறியிருப்பதையும்,
கூர்ந்து நோக்குக.
8. "அன்றியும், ஒரு மாத்திரை
அளவுள்ள முற்றுகரமே குறுகி அரை மாத்திரையாக ஒலிப்பதாயின் நன்னூலார் போலத் தொல்காப்பியரும்.
நெடிலோ டாய்தம் உயிர்வலி மெலியிடைத் |
தொடர்மொழி இறுதி வன்மையூர்
உகரம் அஃகும் |
என்றன்றோ கூறியிருப்பர். அவர்
அங்ஙனம் கூறிற்றிலரே! குற்றியலுகரம் தனி நெடிலுக்குப் பின்னரும், தொடர்மொழி இறுதியிலும்
வரும் வல்லொற்றை ஊர்ந்து வரும் என்றுதானே கூறியுள்ளார்.
நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி
யீற்றும் |
|
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே |
(மொழி. 3) |
முன்னூலாசிரியர் இவ்வாறு தெளிவுறக்
கூற, காரணமின்றி நன்னூலார் அவரோடு முரணுவானேன்?"
குற்றியலுகரம் குறுகியவியல்புடைய தென்பதும்,
அது நிற்குஞ் சொல் ஈற்றயலெழுத்துப் பற்றி அறுவகைப்பட்ட தென்பதும், தொல்காப்பியர் கூறிய
கூற்றுகளே! நன்னூலாரும் இங்ஙனம் கூறியது அவரை முற்றும் தழுவியே.
|