பக்கம் எண் :

22இசைத்தமிழ்க் கலம்பகம்

உ.1
எனாதெ னாதென எலாம தங்களும்
எநாளும் போரிட எனேஇ தன்திறம்
முனேப லோர்உரை சொனாரே ஆயினும்
பொனேயெ னும்பொருள் மனேந வில்தொறும்
(இணை)
2
மறையென நல்லறத் துறையென அரச
முறையென நற்காம வரையறை யுமெனக்
குறையெது மிலாது நிறைவுற இனிய
நறையெனுந் தமிழில் அறைநூல் இன்குறளே
(இணை)
27. திருவள்ளுவர்
'நாயக மேநபி நாயகமே' என்ற மெட்டு
ப.
நாவல னேபெரு நாவலனே
    நடுவே யுரைபெரு நாவலனே
து. ப.
நால்வேறு பாலும் வாழ்வார நூலும்
    நடுவே யுரைபெரு நாவலனே
(நாவலனே)
உ.1
வேளாண் மறையெனும் நாலடி யும்பினே
    விளையும் தமிழ்மறை நாவலனே
வியனுல கதையே பொதுமறை யாக
    விரும்பும் முறைதரு நாவலனே
(நாவலனே)
2
ஆரியன் தேவெனும் ஏமாற் றைஅற
    அன்றே அகற்றிய நாவலனே
சீரிய முறையில் பேரின்ப நெறியும்
    செப்பிய தமிழ்மறை நாவலனே
(நாவலனே)