பக்கம் எண் :

26இசைத்தமிழ்க் கலம்பகம்

3
கன்றுதனை யிழந்து கதறிய ஆவினால்
    கடைமணி யசையவும் காவலனும்
கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங்
    கோன்முறை குலவிய நாடு
(நானிலத்)
4
கூலிகொடுத் தினிய கரும்புதினச் சொல்லிக்
    கூடிய விருந்தின்பின் மிச்சிலுண்டு
நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி
    நிறைவேற்றின வேளாளர் நாடு
(நானிலத்)
5
வறுமையால் வாடிய வண்டமிழ்ப் புலவனும்
    வாழவென் றரசன்தன் தலையுந் தந்தே
அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும்
    ஆலவட்டம் விசிறும் நாடு
(நானிலத்)
6
முத்தமி ழிலக்கணம் முதுமறை மந்திரம்
    முன்னரும் பல்கலை இன்குறளே
சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும்
    சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு
(நானிலத்)
32. தாய்நாட்டு வழுத்து
'வந்தே மாதரம்' என்ற மெட்டுவகை
ப.
தாய்நாடே போற்றி
உ. 1
சேயரின் வாழ்நாள் சிறந்திடக் கனியும்
சீரிய வுணவும் செம்பொனும் மணியும்
வாயுறை பலவும் வழங்குவை இனியும்
வண்பெருந் தமிழே வழிவழி யணியும்
(தாய்)