பக்கம் எண் :

28இசைத்தமிழ்க் கலம்பகம்

3
கடையாந் தமிழ்க் கழகத்தின் பின்னே
     காவலர் பிறர்மேவித் தென்னகம்
முடிவேந்தொடு முந்தமிழ்ப் பண்பாடும்
      முழுதுங் கெட்டுப் பழுதுபட்ட
(மூவேந்)
34. செந்தமிழ் நிலம்
'குன்றநகர் வாழும்' என்ற மெட்டு
ப.
செந்தமிழ் நிலமே - தென்பாண்டிச்
     செழியன் மென்புலமே - எந்நாளும்
(செந்)
து. ப.
முந்தும்அவன் வலமே - தென்வாரி
      முழுகி யின்றிலமே - என்றாலும்
(செந்)
உ. 1
முத்தமிழ்க் கழகம் - மூன்றுமுன்னே
      முடிவேம்பன் உலகம் - பின்னாளும்
எத்தமிழ்க் கழகம் - ஏனைநிலம்
      எழில் தமிழ் இலகும் - உயர்தனிச்
(செந்)
2
வேழ மிகுகோடு - வில்லவனாம்
     வேந்தன் மலங்காடு - விளையுநெல்
சோழம் நிறைகூடு - பாண்டியமே
     சொக்குந் தமிழ்நாடு - முத்தம் மின்னும்
(செந்)
3
வைகையொடு மருதம் - தென்வடக்கு
      மருவூரொடு கருவும் - கீழ்மேற்கு
வைகும்நில முழுதும் - செந்தமிழாய்
      வனைதல் பொய்கருதும் - சொல்லினிய
(செந்)