பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்29

4
இங்கன் இருந்தாலும் - பாண்டியிலே
    இல்லை தமிழுணர்ச்சி - இந்நாளே
கொங்குநிலம் சோழம் - கொண்டாடும்
    குலவு தமிழ்மலர்ச்சி - மொழியிலே
(செந்)
35. பழம் பாண்டிநாட்டைக் கடல் கொண்டமை
'எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தி' என்ற மெட்டு
ப.
வடபா லுயர்ந்து தென்பாலே தாழ்ந்து
வழுதிநா டுண்டது வார்கடலே
உ.1
இடமான நாடும் எழுநூறு காதம்
    எல்லையில் பொருளோடும் இரையானதோ
இடைமன்ற மும்மேல் எண்ணா யிரம்நூல்
    ஏதுமே யில்லாமல் இறந்தாழ்ந்ததோ
(வடபா)
2
பல்லா யிரஞ்சொல் பல்வேறு நுண்மைப்
    பாகுபாடு செய்தும் பாழானவோ
இல்லாத சொல்லும் இணைத்தென்றும் கொள்ள
    இருந்தபல் வேர்ச்சொல்லும் ஏதானவோ
(வடபா)
3
தலையாக நின்று தன்மானத் தோடு
    தமிழன்தான் முன்னேறத் தடைவேறுண்டோ
நிலையேது மின்றி நெடிதாகக் குன்றி
    நின்ற துயர்தீரும் நிலைதா னுண்டோ
(வடபா)