பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்37

2
தம்மைநிலத் தேவரென்றும் தம்மொழிவிண் ணோரதென்றும்
இம்மையில்எல் லாரையுந்தான் என்றுமேயே மாற்றலாமோ!
(நாற்பது)
3
ஆங்கிலத்திற் கலந்திருக்கும் அயல்நாட்டுச் சொற்களெல்லாம்
ஆங்கிலரே விளக்குகின்றார் அழகாய்ச்சொற் களஞ்சியத்தில்
(நாற்பது)
4
ஆனதிர விடத்தாயும் ஆரியத்தின் மூலமுமாம்
தேனெனுமுத் தமிழையினித் தென்மொழியார் போற்றல் வேண்டும்
(நாற்பது)
43. தமிழன் தானே கெட்டமை
'அநாதுடநுகாநு' என்ற மெட்டு
பண் - (சிங்கலம்)
தாளம் - முன்னை
ப.
தன்னாலே தான்கெட்டான் - தமிழனே
து. ப.
குன்னா னொன்றெதிர்த்துக் கோளரி மாய்ந்ததெனச்
சொன்ன லொன்றுளதோ என்னேனும் பொருளே
(தன்)
அ. 1
முந்நாளில் மூவேந்தர் - முடிதான்
    மண்ணாரவே வீழ்ந்தார்
அந்நாள் தொட்டடிமை யாயினும் தமிழர்தாம்
     இந்நாளும் அதுவேல் என்னே யிம்மடமை
(தன்)
2
ஏமாறி யில்லாமல் - எவனும்
     ஏமாற்ற வழியுண்டோ
தாமாகத் தம்மைத் தணித்துக்கொண் டயலார்மேல்
     தப்பாகச் சுமத்தின் தங்காது பழியே
(தன்)