|
46. வடமொழியால் தமிழ் கெட்ட வகைகள் |
|
‘சிலுவை சுமந்திதோ செல்கின்றார்’ என்ற மெட்டு |
1 |
| வடமொழி யால்தமிழ் வாழ்வை யிழந்ததே | | மடமையி னால்தமிழ் மாந்தரும் தந்ததே. |
|
2 |
| வழிபாட்டு மொழியாக வழங்காத படிதமிழ் | | இழிவாகச் சிறுமையில் இயன்றது நெடிதுமே. |
|
3 |
| அந்தநாள் கொடுந்தமிழ் ஆனபல் திரவிடம் | | செந்தமிழ்ப் பகையெனச் சேர்ந்தஆ ரியத்திடம். |
|
4 |
| தமிழையே தாழ்வென்று தமிழர்என் போருமே | | தள்ளினர் தமிழ்நூல்கள் வெள்ளமே சேருமே. |
|
5 |
| வழங்காமை யாற்பல வண்டமிழ்ச் சொற்களே | | விளங்காது போய்ப்பல வீழ்ந்துபின் பட்டன. |
|
6 |
| தம்பொருள் இழந்தன தமிழ்ச்சொற்கள் சிலவுமே | | எம்மொழி யோவென இடந்தந்து நிலவுமே. |
|
7 |
| தலையிடைக் கழகத்துத் தனித்தமிழ் நூலெல்லாம் | | அலையிடைத் தப்பினும் அழிந்தனபின் னெல்லை. |
|
8 |
| கடைத்தமிழ்க் கழகமும் கலைந்தது மாயமே | | நடைத்திறம் ஒலிசொல்லும் நற்றமிழ் நோயுமே. |
|
9 |
| வரலாறு மறைந்ததால் வடமேல்நின் றிங்குற்றே | | வடமொழியால் தமிழ்வளம் பெற்றதென் றிட்டார். |
|