|
10 |
| தமிழ்இந்த நாள்ஒரு தனிப்பட்ட கட்சியும் | | தாழ்த்தப்பட் டோருமே தழுவுறப் பெற்றது. |
|
11 |
| தாய்மொழி யுணர்வின்றித் தமிழர்பன் மொழிச்சொல்லைத் | | தமிழோடு கலந்ததால் தவிர்ந்ததே வழக்கெனல். |
|
12 |
| வையாபுரி போல்வார் வளமாக வாழ்கின்றார் | | மெய்யான தமிழரே மிடியுண்டு வீழ்கின்றார். |
|
47. நக்கீரர் அங்கதம் |
|
பண் - (சிந்து பைரவி) தாளம் - ஒற்றை |
1 |
| ஆரியம் நன்று செந்தமிழ் அன்று | | பாரினில் என்று பண்பாடு விண்டு | | கூறின துண்டு கொண்டானும் முன்று | | கீரனுங் கண்டு வெஞ்சினங் கொண்டு | | தீரவே ஒன்று பாடினன் அன்று தீர்ந்தனனே. |
|
2 |
| முரணெது மின்றி முத்தமிழ் கூறி | | அரணாயி ருந்த அகத்தியன் வாழி | | பரணரும் வாழி பாங்காய மர்ந்து | | பாரியைப் பாடும் கபிலரும் வாழி | | இறந்த கொண்டானும் வாழியே என்ன எழுந்தனனே. |
|