|
49. தமிழ்நாடு வரவரத் தேய்ந்தமை |
|
'நானிருப்ப தேழடுக்கு மாடி' என்ற மெட்டு |
1 |
| நாவலம் எல்லாம்முன் தமிழ்நாடு - அதில் | | நண்ணியது செந்தமிழ்ப் பண்பாடு | | மூவரான வேந்தர் முடியொடு - அதை | | முன்னர்ஆண்டு வந்தனரே நீடு (நாவலம்) |
|
2 |
| தென்குமரி மலைமுது பாண்டி - நிலம் | | திரைகடல் புகுந்தது காண்டி | | செந்தமிழ் நிலத்தின்எல்லை தாண்டி - மிகச் | | சிறுகிவந்த தேதேரை தீண்டி (நாவலம்) |
|
3 |
| ஆரியம் வந்துபுகுந்த அன்றே - விந்தம் | | அடைந்தது வடவெல்லை யென்றே | | சீரிய தமிழ்திரிந்த பின்றே - வடம் | | செப்பின எல்லை வேங்கடக் குன்றே (நாவலம்) |
|
4 |
| கழகத்தின் பின்னேகரு நடமும் - மெல்லக் | | கரைந்துவந்த கொங்குநாட் டிடமும் | | அழகிற் சிறந்தசேரன் குடமும் - ஆகும் | | அரையாரி யத்தென்திர விடமும் (நாவலம்) |
|
5 |
| இன்றுதமிழ் நாட்டுவடம் சென்னை - அதும் | | எதிர்ப்பு மிகுந்ததிடை யென்னை | | முன்று தமிழ்ப்பேரு மில்லை பின்னை - முற்றும் | | முடித்திடுவாரோ தமிழ் தன்னை (நாவலம்) |
|