பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்47

26
நாற்றிறத் தொழிலரை நால்வேறு பாலென்று
     நற்றமிழரை யெல்லாம் நான்காவதாம்
சூத்திரனென் றாரியன் சொலத்தன் னைச்சற்
    சூத்திர னென்றனன் வேளாளன்.
7
வெண்ணிற மாய்வந்த வேற்றவர் மொழியுடன்
     விண்ணவர் வழியென்று வீழ்ந்து கெட்டான்
கண்ணிய மாகமுன் கருதிய தமிழனே
    கண்ணான தமிழைப் புண்ணாக்கி விட்டான்.
53. தமிழ்ப் புலவர்க்குப் பிழைப்பின்மை
படிக்காசுப் புலவர் புலம்பல்
'மீளாத நரகினுக் காளாக்கும் குடியே' என்ற மெட்டு வகை
ப.
பாழானதே என் வாழ்வு பண்ணாருந் தமிழே
ஏழாங் கடையிலும் என் எண்ணம் நீர்க் குமிழே
து. ப.
தாழாத பணியெனும் தாளாண்மை யுழவே
வாழாது கழிந்ததென் வாளாண்மை மழவே
(பாழா)
உ.1
செப்படி மயக்கமே செய்கலையும் - மிகச்
    சேணுயர் கழைக்கூத்துந் தெரிந்தோமில்லை
தப்பிய மகளிராய்ப் பிறந்தோமில்லை - செல்வத்
    தையலார் குற்றேவலும் செய்தோமில்லை
(பாழா)
2
மூவேந்த ரொடுவேளிர் முதுகுமணன் - கொடை
   முதிர்ந்த நல்லியக் கோடன் முனம் மறைந்தார்
ஈவேந்தன் சீதக்காதி இரகுநாதன் - பின்னே
   இலவம் பஞ்சேதமிழ்ப் புலவ ரெல்லாம்
(பாழா)