|
உ.1 |
| இந்நாட் டிற்பலர் தென்னாட்டு மொழி | | இங்கோர் கட்சிக்கே யுரியதா | | மன்னாட்டு மொழி யின்னாட்டமுற | | வந்தே மாற்றியே மயக்குவார் (எந்) |
|
2 |
| நன்றா யிருக்கும் நாயைக் கொல்லவே | | நண்ணா வெறிச்சொல் ஏற்றுவார் | | இன்றே தமிழை யொழிக்கப் பகைவர் | | இங்கோர் கட்சியைச் சார்த்துவார் (எந்) |
|
3 |
| பெற்றோ ரைமிகப் பேணுகின்றதும் | | பின்னே தீங்கெனப் பேசுவார் | | மற்றோர் கெடுதி மொழியினும் நலம் | | மன்னா நஞ்சென வீசவே (எந்) |
|
4 |
| பன்னாட் டொன்றியம் தந்தேயம் இதிற் | | பன்னான் மொழிகள் பாங்குறும் | | மன்னாட்சி மொழிஇந் நாவலுற | | எந்நாளும் பொதுவாங்கிலம் (எந்) |
|
84. தமிழனுக்கு அறிவுறுத்தல் |
|
'ஓடி விளையாடு பாப்பா' என்ற மெட்டு |
1 |
| தன்மான மில்லாத தமிழா - உன்றன் | | தந்தையர் மாவேந்தர் தமிழா | | இந்நாண நிலைகொண்டாய் தமிழா - தீய | | ஏதிலரை நம்பித் தமிழா. |
|