85. பகுத்தறிவைப் பயன்படுத்தல்
பண் - (பியாகு) தாளம் - முன்னை | | ப. | | பகுத்தறிவை நீ பயன்படுத்து | | பாரிலே பெரிய ஏ மாறியாம் தமிழனே (பகுத்) |
| உ.1 | | வகுத்த மூவாயிரம் வழங்குமொழி களுள்ளே | | வளம்பெறு தமிழ்முதல் தாய்மொழியே | | உகுத்தபல் சொற்களால் உண்டான செயற்கையாம் | | உயிரற்ற வடமொழி உயர்வழியோ (பகுத்) |
| |