பக்கம் எண் :

76இசைத்தமிழ்க் கலம்பகம்

2
பெற்ற தந்தையுடனே பிள்ளைகள் பேசுதற்குப்
    பிறிதொரு மொழிஞனைப் பெறவேண்டுமோ
முற்றும் விளங்காமொழி முணுமுணுக் கும்பிறனே
     மூலத் தந்தையைத்தொழ வரவேண்டுமோ
(பகுத்)
3
விடுதலைப் போராட்டம் வேற்றவ ராட்சியை
     விலக்கி நல்வாழ்வையே விளைப்பதற்கோ
வடதலை நாட்டினர் வறிய இந்தி புகுத்தி
    வண்டமிழ் மொழியையே ஒழிப்பதற்கோ
(பகுத்)
4
தன்னகத் தண்ணீரூற்றித் தன்பழ மட்கலத்தில்
     தயிரைத் தருபவளும் தமிழப் பெண்ணே
மன்னரும் மாசெல்வரும் மரக்கறி வேளாளரும்
     மடைதரின் ஒருசிலர் மறுத்தற் கண்ணே
(பகுத்)
5
ஆயிரந் தலைமுறை ஆனபின்னரும் முன்னோர்
     ஆற்றிய தொழின்முறை அடைகுலமோ
மாயிருந் தமிழினம் மலையும்பல் பிரிவுண்டு
    மடியவே பகைசெய்த வகைவலமோ
(பகுத்)
86. தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை
'ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே' என்ற மெட்டு
ப.
தமிழனே உலகில் தாய்மொழி பேணாதவன்
து. ப.
இமிழ்கடல் சூழுலகில் இதுவும் ஓர் இறும்பூதே
(தமிழனே)
அ.1
ஏனைய உயர்நிலை இலக்கியச் செம்மொழிகள்
இறந்த பின்னரும் தமிழ்இளமை குன்றா வழியும்
(தமிழனே)