| நூலென்றாலோ கோல்சாயும் | | நுந்தமரென்றால் வெஞ்சமராம் | | கோலென்றாலோ குடிசாயும்! | | கொள்ளும் அமைச்சன் வேளாளன். |
|
94. தமிழனுக்குத் தகுதியுண்மை |
|
'கூடி மருந்தரைப்போம்' என்ற மெட்டு |
ப. |
| தகுதியில் தாழ்ந்தவனோ - தமிழன் | | தானாக வீழ்ந்தவனோ. |
|
உ.1 |
| இகமிதில் ஏனையர் மோதும் | | இருளில் கிடந்துழல் போதும் | | தகும்பல் கலையிறும் பூதும் | | தமிழன் கண்டான் ஓதும் ஓதும் (தகுதி) |
|
2 |
| வலங்கை யிடங்கை ஒன்று | | வழங்கா மல்இடம் பின்று | | குலமுறை யாற்கலை யின்று | | குறைந்தான் தமிழன் இன்று இன்று (தகுதி) |
|
3 |
| இன்றும் பல்துறைக் கலையே | | இருந்தான் தமிழன் தலையே | | நன்றே திருந்தின் நிலையே | | நண்ணும் மேலையர் துலையேதுலையே (தகுதி) |
|