|
உ.1 |
| வானவர் மொழியென வரும்வட மொழியே | | வாய்ந்தது தமிழினால் வலந்திரிந் துழியே | | ஏனுயர் தமிழனும் இழிவுறும் பழியே | | எய்தினன் இனியேனும் ஏமாறல் ஒழியே (நானொரு) |
|
2 |
| முந்தியே பெறுவது மொழிதரும் பேரே | | முன்கையே தோளினும் முன்னுறும் பாரே | | இந்தியன் எனும்பெயர் இரண்டாவ தோரே | | இதன்பின்னே ஆசியன் என்பது நேரே (நானொரு) |
|
3 |
| பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன் | | பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன் | | ஊரெலாம் சொந்தமாய் உள்ளினான் தமிழன் | | ஒருவனே தேவன்என் றுணர்ந்தவன் தமிழன் (நானொரு) |
|
97. ஆங்கில ஆரியப் பண்பாடு வேற்றுமை |
|
'ஆரியோகே ஓய்' என்ற மெட்டு |
1 |
| தாழ்ந்தவன் உயர்ந்ததே ஆங்கி லத்தினால் - அவன் | | தலைவருக் குணவிட்டான் தங்கமே தங்கம் | | உயர்ந்தவன் தாழ்ந்ததோ ஆரி யத்தினால் - அவன் | | உணவமைத்தல் இழந்தான் தங்கமே தங்கம். |
|
2 |
| உடலைப் பிணித்ததுவே ஆங்கில வாட்சி - அதும் | | ஒழிந்துபோய் விட்டதுகாண் தங்கமே தங்கம் | | உளத்தைப் பிணித்ததுகீழ் ஆரிய வாட்சி - அது | | உள்ளரித்துக் கொண்டிருக்கும் தங்கமே தங்கம். |
|
3 |
| நடுநிலைத் தண்டனைதான் ஆங்கிலத் தீர்ப்பு - அது | | நாயனாரின் தமிழ்முறை தங்கமே தங்கம் | | குடிநிலைத் தண்டனைகீழ் ஆரியத் தீர்ப்பு - அது | | கொடிய மனுமுறையே தங்கமே தங்கம். |
|