|
4 |
| கல்வியெல் லாருக்கும்பொது ஆங்கி லமுறை - அதிற் | | கண்ணிய தொழில்செய்யலாம் தங்கமே தங்கம் | | கல்வியொரு குலமேகீழ் ஆரியமுறை - பிறர் | | கைத்தொழிலைச் செய்ய வேண்டும் தங்கமே தங்கம். |
|
5 |
| அறிவை வளர்த்ததுநல் ஆங்கிலக் கல்வி - அது | | மதியைக்கூ ராக்கியது தங்கமே தங்கம் | | அறிவைத் தளர்த்ததுகீழ் ஆரியக் கல்வி - அது | | மதியை மழுக்கியது தங்கமே தங்கம். |
|
6 |
| மறைந்தமெய் வெளிப்படல் ஆங்கி லத்துறை - அது | | மாண்புடைய ஆராய்ச்சி தங்கமே தங்கம் | | வெளிவந்த மெய்மறைதல் ஆரி யத்துறை - அது | | வீணர்செயும் சூழ்ச்சியாகும் தங்கமே தங்கம். |
|
98. நன்றி மறவாமை |
|
'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற மெட்டு |
ப. |
| மறவாதே நன்றி மறவாதே - மனம் | | மாறி நாயினுங் கீழாய்ப் பிறவாதே. |
|
உ.1 |
| உன்- குறுமுடித் தலையும் அணிந்திருக்கும் - நல்ல | | கோலங்கள் உள்ள பலவகை யுடையும் | | குணக்கிந்தியக் குழும்பின் அரசுனக்கு - முனங் | | கொடுத்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் (மறவாதே) |
|