99. ஆங்கிலத்தில் தீமையின்மை
'நந்த வனத்திலோ ராண்டி' என்ற மெட்டு1 | | ஆங்கிலந் தீயதே யன்று - அதை | | ஆய்ந்துகண் டால்தமிழ் அடிப்படை யுண்டு | | ஈங்கும் அதைத்தாயாய்க் கொண்டு - பலர் | | இருக்கின்றார் ஆங்கில இந்தியர் என்று (ஆங்) |
| 2 | | குடமொழி யால்மிகக் கேடு - என்று | | கூறாதே வந்தது குணமத னோடு | | வடமொழி இந்திதென் னாடு - வந்து | | வழங்குவ தாற்பல வன்பெரும் பாடு (ஆங்) |
| | | |