பக்கம் எண் :

92இசைத்தமிழ்க் கலம்பகம்

து. ப.
ஆங்கிலம் ஈங்கில்லை என்றதை அகற்றுதல்
ஆங்கில இந்தியரை அகற்றல்
(இந்தி)
துஅ.1
உடன்பிறந்தவரே அகவை வேறெனும் உரிமையைப் பெறுவதில் ஒருசம நிலையர்
உடனியல் மொழிகளும் மொழிபவர் குறையினும் உரிமைகொள் தகுதியில் ஒருசமமே.
(இந்தி)
து2
பெறுமதிக் கெண்ணின் பெருமையே என்றும் பேணிய அளவை என்பது தகுமோ
சிறுபுதுச் சல்லிகள் ஆயிரம் சேரினும் செம்பொனின் ஒரு மணிக்கி ணையாமோ
(இந்தி)
து3
சேய்மொழி யியலாம் சிறுபால் வடமொழி செயற்கை யதெனினும் சிறப்பி னையுறுமே
தாய்மொழி யாகிய தமிழே என்றும் தாழ்வினில் வீழ்ந்து தளர்ப்புறுமோ
(இந்தி)
து4
ஆங்கிலம் இந்திய மொழியுமின் றாகும் அதுவே ஆட்சி மொழியென லாகும்
தூங்கிய தமிழனும் விழித்தெழுந் தினியே தொல்லையில் நின்றும் உயலாகும்
(இந்தி)
103. இந்தியின் அயன்மை
'மேரே தில்லியப் புக்காரே' என்ற மெட்டு
துப.
இங்கே ஆங்கிலம் நின்றாலும் அதே
இந்தி ஆளுகை வந்தாலும் அதே.
துது. ப.
இரு மொழியும் அயல் இனவழி யாரியம்
(இங்கே)