|
108. புலமையில்லாரும் புலவரொடு சொற்பொழிவாற்றல் |
|
பண் - செஞ்சுருட்டி தாளம் - முன்னை |
ப. |
| அடியார்நின் றாடுகின்ற திருக்கூத்தில் - வந்து | | குடிகாரர் ஆடுகின்ற தெருக்கூத்தே. |
|
து. ப. |
| படியார்தம் பதவியால் செருக்கேற்றித் - தமிழ் | | படித்தவருடனும் சொற்பெருக்காற்றே (அடியார்) |
|
உ.1 |
| கண்ணையே கவர்நீலக் கண்பீலி - மிகக் | | காண்வரு தோகையை முன்தான் கோலி | | வண்ண நடஞ்செய்கின்ற மயிற்போலி - நிற | | வாகில்லாக் கருநட வான்கோழி (அடியார்) |
|
2 |
| கணக்காயர் பள்ளியிலே ஒரு பாட்டு - வேறு | | கல்லாத பேதையுமே தான் கேட்டு | | வணக்கமில்லா தவையிற் சொல வேட்டு - மிக | | வாய்திறப்பது தீயவிளை யாட்டு (அடியார்) |
|
3 |
| செந்தமிழ் வரலாறே அறியாது - அதன் | | சீரிய இலக்கணம் தெரியாது | | எந்த மொழியென் றாய்தல் எமக்கேது - நடு | | இருப்பதெம் கருத்தெனல் பெருந்தீது (அடியார்) |
|
4 |
| நூற்றினுக் கெண்பதுபேர் கல்லாமை - இந்த | | நாட்டிற் புகுந்திருக்கும் வல்லாமை | | ஏட்டுக்கல்வி யால்அதைக் கொல்லாமை - இன்று | | ஆட்சிப் பதவியார்சொல் எல்லாம்மெய் (அடியார்) |
|