|
109. தமிழ் கடன்கொண்டு வளராது |
|
சித்தார்வண்ணம் |
பண் - பீன் பலாசு தாளம் - முன்னை |
ப. |
| கடன் வாங்குவதால் தமிழ் வளருமென்றே - பலர் | | வலிந்துரைப்பார் மொழிவகை யறியார். |
|
து. ப. |
| கடன் வாங்கியதே யில்லை தமிழ் அதிலே - பல | | வடசொல்லைப் பகைவர் புகுத்தியதால் - தமிழ் | | வளமிகக் குன்றி வருகின்றதே (கடன்) |
|
உ. |
| ஒருவறியவன் வணிகம் செய்வதென்றால் - கடன் | | வாங்கியே செய்தல் வகையாகும் | | கடன்வளவனும் வீணாய் வாங்கிவரின் - அவன் | | வண்பொருள் குன்றி வருவதுடன் - கடன் | | வாங்கியென் றிழிவும் வந்துவிடும். (கடன்) |
|
110. ஏமாற்றுந் தமிழ்க்காவலர் |
|
'சிங்கார வேலனே வா' என்ற மெட்டு |
ப. |
| இந்த நாளிற் பல பேரே - இங்கே | | இன்றமிழ்ப் பேராலே ஏமாற்று வோரே. |
|
து. ப. |
| சொந்த நலத்தை முன்தூக்கிச் செய்வாரே | | சும்மா செய்யார் தமிழ்க் கிம்மியும் பாரே. (இந்த) |
|
உ.1 |
| அந்தமிழ்க் காவலர் என்பார் - அவர் | | அறியும் தமிழ்ப்பேரைச் சிறிதும் விரும்பார் |
|