பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்105

117. இரண்டில் எதுவேண்டும்?
(இசைந்த மெட்டிற் பாடுக)
ப.
உனக்குக் - கன்னித்தமிழே வேண்டுமா - இந்திக்
     கட்சித் தலைவர் வேண்டுமா.
து. ப.
எண்ணித் துணிக ஒன்றையே - என்றும்
ஏமாறிக் கெடுகின்றையே
(கன்னித்)
உ.1
கன்னித்தமிழ் வேண்டுமென்றால் - இந்திக்
     கட்சியை நீவிட்டு நீங்கின்றே
என்னத்தைப் பெறினும் பின்றே - தமிழ்க்
     கிம்மியேனும் ஈடிணை யின்றே
(கன்னித்)
2
என்னேனும் தமிழறியார் - அது
     இறவாதே இந்தியால் என்பார்
எந்நாளும் பதவி கொள்வார் - அதற்
     கெதுவே னும்செயத் துணிவார
் (கன்னித்)
3
காசுமிகத் தொகுக்கவே - சிலர்
     கட்சியை யமைத்திருக் கின்றார்
பேசுவ தெல்லாம் முரணே - பெரும்
     பேதைகள் அவருக் கரணே
(கன்னித்)