பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்11

11. தமிழின் முதுமையும் இளமையும்
'சித்தாதி சித்தர்கள் நித்தம் துதித்திடும்' என்ற மெட்டு
1
எண்ணிற்கு மெட்டாத தென்னர் புலத்தான கன்னித் தனித்தமிழே
என்உளமகிழ் வண்ணக் கருத்துமிழே
இங்கே - ஏனைமொழி யுன்னால்
ஈனை பெற முன்னே
தானே தனித் தோன்றினாய்
பெருஞ்சொல்வளத் தானே கிளைத்தூன்றினாய்
2
பேரச் சிறாரிறந்து தீரப்பின்னும் வலிமை
சீருற்றிருந்தோ னென்ன
இளமைநலம் - பாரித்திருந்தாய் இன்னும்
பல ஆரிய மாமொழிகள்
சீரிய வேனுமுனே
பாரில் வழக்கிறந்து
போயின வுன்றன் - பேரே வரச் சிறந்து.
12. முதல் தாய்மொழி
'ரகுநாயக' என்ற மெட்டு
பண்-(அமிசதொனி)
         தாளம் - முன்னை
ப.
முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ்
    பேதைத்தமிழரால் பிறங்கா* தமிழ்
து. ப.
முதுநாள் நிலத்தென் முனையேநிகழ்
    முதன் மாந்தர் வாயின் முளையா முகிழ்
(முதல்)
*குறிப்பு : பிறங்காது அமிழ் எனப் பிரிக்க.