|
174. இந்தியெதிர்ப்பு |
|
'தீரே தீரே' என்ற மெட்டு |
ப. |
| ஏனோ தானோ என்றிராமல் இன்றே | | இந்தியை எதிர்க்க | | இன்னுஞ் சின்னாள் ஏகினாலே | | எதுவும் இயலாது |
|
து. ப. |
| போன நாளே பொன்னும் புலமும் | | ஏனை யாவும் போஒய் இந்நாள் | | எஞ்சும் மொழியொன்றே | | இந்தி யாலே அதுவும் போகின் | | இருக்கும் எழுத்தும்பின் ஏதமிழா! | | இருந்த இடமுந் தெரியாதே போம் | | எதிரும் நாகரியால் (ஏனோ) |
|
175. கட்டாய இந்தி வேண்டாமை |
|
'விளக்குமாற்றை யெடுத்துக் கொள்ளடி' என்ற மெட்டு வகை |
1 |
| கட்டாய இந்தி ஏன் கற்கவேண்டும் - நாமே | | கைகட்டி ஏன் வடவர்க்கு யாண்டும் - முன்னே | | நிற்கவேண்டும் - இழி | | விற்கு மீண்டும் (கட்டாய) |
|
2 |
| வடமொழி யாலிங்கு வந்த கேடு - பல | | வாயிற்சொல்ல முடியாத பாடு - அவை | | வளரும் நீடு - இல்லை | | வரைய ஏடு. (கட்டாய) |
|
3 |
| இந்தியினால் தமிழ்க் கென்ன நன்மை - அதால் | | எல்லாச் சொல்லும் ஈறு கெட்ட தன்மை - எய்தும் | | மற்றும் வன்மை - இது | | முற்றும் உண்மை. (கட்டாய) |
|