|
2 |
| இந்நிலம் ஆங்கிலர் நீங்கின போது | | இந்தியே பொதுமொழி என்றாரோ ஓது | | தென்னவர் தெம்மாடி யானதே தீது | | திரளானோர் கல்லாமைத் திறமுமே தோது. (இந்தி) |
|
3 |
| ஏருழு வோன்மிக இளப்பமா னாலே | | எருதுந்தான் அளியனாம் இனமுறை யாலே | | ஆரியந் தெய்வமென் றேறிய மாலே | | அரும்பி வரும்இந்தி அளவில்லா மேலே. (இந்தி) |
|
4 |
| தென்மொழி யெல்லாமே தீந்தமிழ் சேரும் | | திரவிடர் இவ்வுண்மை தெளியார்எல் லாரும் | | தன்மொழி யாரெல்லாம் எண்ணுங்கால் நேரும் | | தமிழுக்கும் நல்லதோர் பெரும்பான்மை பாரும். (இந்தி) |
|
5 |
| இந்தியால் ஒற்றுமை என்றுமே இல்லை | | இனிவரார் ஆங்கிலர் இந்திய எல்லை | | இந்தியார் சூழ்ச்சியை இனியறிந் தொல்லை | | இருத்துக ஆங்கிலம் இல்லையே தொல்லை (இந்தி) |
|
6 |
| சீனத்தை நோக்கவே சிறுதேசம் இந்து | | சீனங்கட் டாயமாய்ச் சேருமோ வந்து | | ஏனைத் திசையுள்ள இந்தி வலிந்து | | ஏனிந்த நாட்டிற்குள் எய்தும் புகுந்து (இந்தி) |
|
7 |
| ஆசியா தானொரு மாபெருங் கண்டம் | | அதனுள்ளே இந்தியா அமையும் உட்கண்டம் | | பேசுறும் பற்பல மொழிகளைக் கொண்டும் | | பேணுவீர் இவ்வுண்மை பிறவும்உட் கொண்டும் (இந்தி) |
|