பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்247

5
வன்செயல்கள் செய்ததற்கு வண்மதுரைப் படுகொலையே
முன்செயலாய்த் தூண்டியது முதிர்வித்ததும் சுடுகொலையே
(தமிழைச்)
6
இந்தியை யெதிர்ப்பதெல்லாம் இன்றமிழைக் காப்பதுடன்
முந்திய அடிமைத்தனம் மூளாமல் தீர்ப்பதற்கே
(தமிழைச்)
302. இந்திப்போராட்டத்தில் இறந்தவர்க்கு அமைதி
பண் - காப்பி
தாளம் - ஒற்றை
ப.
அமைதி அமைதி அமைதி அமைதி
உ.1
அண்ணா மலையார் நகரில் சுட்ட
அரசேந் திரனின் ஆவி அடைக
(அமைதி)
2
மதுரைக் கயவர் மடவாள் வெட்டால்
மாய்ந்த தமிழ மணியும் அடைக
(அமைதி)
3
எரிகை சுடுகை இரண்டால் இறந்த
ஏனோர் ஆவி எல்லாம் அடைக
(அமைதி)
303. மாணவர்க்கு அறிவுரை
'கைராட்டினமே' என்ற மெட்டு
ப.
இளமாணவரே இது காணு விரே.
உ.1
ஆங்கிலந்தான் இங்கிருந்தே நீங்கியபின் - மேல்
ஓங்குவ தில்லாமலே பின் வாங்கிடுவோம்.
(இள)