|
4 |
| ஆரியமோ சேமியமோ பேருமறி யாது | | சீரியநற் செந்தமிழே பேசினோம்வ ழாது |
|
5 |
| திணைப்பிரிவே யன்றிவேறு குலப்பிரிவும் இல்லை | | தினைத்துணையும் பகையின்றித் திளைத்தனம்நான் கெல்லை |
|
6 |
| முருகனொடு வள்ளியெங்கள் முன்னோரின் தெய்வம் | | சரவணன்என் றொருகதைபின் சாற்றினார்என் செய்வம். |
|
7 |
| தினைமாவைத் தெள்ளியதில் தேன்கலந்தே தின்போம் | | மலையோரம் மேயவரும் மான்கறியும் உண்போம் |
|
8 |
| பாண்டியரும் வேட்டம்வரின் பாங்காகி விளிப்போம் | | வேண்டியபல் லாட்டுகளும் விளையாடிக் களிப்போம் |
|
9 |
| மரவுரியும் மான்றோலும் துறவிகளுக் கிறைப்போம் | | மருந்துகளும் சித்தருக்கு மருங்கிருந்தே யரைப்போம் |
|
10 |
| அடிமையென்றும் வறுமையென்றும் அறிந்ததில்லை நாங்கள் | | குடிமைஎன்னும் ஓரினமாய்க் கூடிவாழ்ந்தோம் ஆங்கே. |
|