பக்கம் எண் :

66இசைத்தமிழ்க் கலம்பகம்

4
வணிகர் முறையிலே தமிழை
       வடவெழுத் தோடும் வளர்ப்பார்
துணிவாய் ஆங்கில வொலியும்
       தொடர்ந்துசெந் தமிழைத் தளர்ப்பார்.
5
மொழியென் பதொரு சொற்றொகுதி
       ஒலியென் பதொரு சொற்பகுதி
பொழிபொருட் சொல்லே தகுதி
       பொலிவிலே ஒலியின் மிகுதி.
75. பழந்தமிழ்த் தூய்மை
'கிருட்ணா முகுந்தா முராரே' என்ற மெட்டு
ப.
முன்னே முழுத்தூய்மை மொழியே - தமிழ்
உ.1
இந்நா டாங்கிலர் எய்து முன் சொலுமே
இருந்ததோ தமிழில் ஆங்கிலமே - மு.
2
ஆரியர் இங்குவத் தணைந்திடு முன்னே
ஆரியம் இங்குண்டோ ஆய் இன்னே
(முன்னே)
3
முதலிரு கழகமும் முழுவதும் தமிழே
எதுபொரு ளெனினுஞ்சொல் அத்தமிழே
(முன்னே)
76. தமிழே தனித்தமிழ்
'சந்திர சூரியர் போங்கதி மாறினும்' என்ற மெட்டு வகை
ப.
தமிழ்என ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிரு மொழியில்லை
தமிழது தானே தனித்தமி ழாகும் தவிர்ந்திடின் பிறசொல்லை.