பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்191

வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர் வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து, ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோ னுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.”

இலக்கியம்

தமிழிலக்கியத்தை இயல், இசை, நாடகம் என மூவகை யாக வகுத்து, அவற்றை முத்தமிழ் என்றனர் முன்னோர்.

இயல்பாகவுள்ளது இயற்றமிழ்; அதனொடு அராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ். இசைத்தமிழொடு ஆட் டஞ் சேர்ந்தது நாடகத்தமிழ்.

முத்தமிழில் ஒவ்வொன்றும் இலக்கணம், இலக்கியம் என இரு பிரிவுடையது. தொல்காப்பியம் போன்றது இயற்றமி ழிலக்கணம்; மணிமேகலை போன்றது இயற்றமிழ் இலக்கியம். இசை நுணுக்கம் போன்றது இசைத்தமிழ் இலக்கணம்; தேவாரம் போன்றது இசைத்தமிழிலக்கியம். செயிற்றியம் போன்றது நாடகத்தமிழ் இலக்கணம்; சீகாழி அருணாசலக் கவிராயர் இயற்றிய இராமாயண நாடகம் போன்றது (ஆனால் உரை யிடையிட்டது) நாடக இலக்கியம். அகத்தியம் முத்தமிழிலக்க ணம்.; சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கியம் என்று சொல்லலாம்.

தமிழ்நாடக விலக்கியத்தைச் சிலர் ஆரிய மொழிகளி லுள்ள நாடகத் தொடர்நிலைச் செய்யுள் போன்றதாகக் கருதுகின்றனர். இசைப்பாட்டும் உரையுமாக அமைந்து நடித் தற்கேற்ற நிலையிலுள்ளதே தமிழ்நாடக விலக்கியமாகும்.

இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.1 இவை இலக்கு என்னும் பகுதியடியாய்ப் பிறந்து முறையே, அணம், இயம் என்னும் ஈறு பெற்றவை யாகும். இலக்கு இலை. இலக்கித்தல் எழுதுதல் (சீவக. 180). இலக்கணம், இலக்கியம் என்பவற்றின் திரிபே, லக்ஷணம், லக்ஷியம் என்னும் வடசொற்கள். வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்கும் சொல் வியாகரணம்


1. 'இலக்கணம்', 'இலக்கியம்' என்னும் சொற்களைப்பற்றித் தமிழ்ப்பொழிலில் யான் வரைந்துள்ள கட்டுரையைக் காண்க.