E. chit, a baby, a piece of paper, A.S. cith, a
young tender shoot.
சோட்டா(இ.) = சிறு.
சிண்டு - சிறுகுடுமி. சிம்பு = சிறு
சிராய். சில் - சில்லி - சல்லி = சிறியது, சிறு துண்டு,
சிறு காசு. சில் = சின். சில் = சிறு. சில் = சில.
சிறப்பு
சிறு - சிறுகு, சிறுத்தை, சிறுக்கன் (சக்கன்,
ம.). சிறாய், சித்தி. சின் - சின்ன - சின்னம் -
சின்னான். சின் - சின்னி - சீனி. சீனி மிளகாய் =
சிறிய மிளகாய். சின்னம் = சிறியது, துண்டு, அடையாளம்.
’சின்னஞ்சிறியது’, ’சின்ன பின்னம்’ என்னும் வழக்கை
நோக்குக.
ஒ.நோ: குறி (அடையாளம்) > குறு. L.
signum, Fr. signe, E. sign.
சின் - சினை = சிறுபகுதி, உறுப்பு, சிற்றுயிரி,
கரு, முட்டை.
4. பிளவுக்கருத்து
: ஒரு துண்டு ஒரு பொருளினின்று பிளந்துபோன பகுதியாதலின்,
சிறுமைக் கருத்தில் பிளவுக்கருத்துத் தோன்றிற்று.
பில் - பில்லை - வில்லை. பில்லை = சிறு
தகடு. பிள் - பிள்ளை = சிறியது அல்லது தாய்வயிற்றினின்று
பிரிந்தது.
பிள்ளை: Cf.
L. felius, a son. பிள் - பீள் - இளங்கரு.
பிள் - பிள. பிள - பிழா - பிடா - பிடவு -
பிடவம் - பிடகம் = பெட்டி, பெட்டகம். பிழா = பிளந்த
அல்லது அகன்ற வாயுள்ள ஓலைக்குட்டான். பிள் - பேள்
- பேழ் - பேழை = வாயகன்ற பெட்டி, பெட்டி போன்ற
மரக்கலம்.
பிள் - பிழை. பிழைத்தல் = நெறியினின்று
பிரிதல், துன்பத்தினின்று தப்புதல்.
ஒ. நோ: தப்பு = (1) தவறு, (2) உய்வு.
பிள் - பிலம் = பிளந்த நிலம், நிலக்குகை.
பிள் - பிள - பிளம்பு - பிழம்பு = பிரிவு,
துண்டு, தூண், பகுதி. பிள - பிளவு = விளவு (1) கமர், (2)
பிள்ளைமை, இளமை. பிள - பிளவு - பிளவை. பிள் - பிடு -
பிடுகு - விடுகு - விடுக்கு - விசுக்கு - விசுக்குணி. விடுகு =
துண்டு.
Ice. flaga, fragment, W. flaw, a splinter.
பிடுகு - விடுகு = பிள்ளை. பிடுகு - பிடுக்கு -
பிசுக்கு - பிசுக்கி. பிசுக்கு = துண்டு. Fr.
piece; It.pezza; Bret. pez; W. peth; E. piece.
பிள் - பிய் - பிஞ்சு; பிய்த்தல் = பிளத்தல்,
துண்டாக்கல்.
பிள - பிடு - பிடுங்கு - பிடாங்கு - பீரங்கி.
பிடுங்குதல் = பிரிதல், பிரித்தல், பறித்தல், வெடித்தல்.
பிடுங்கு - பிடுங்கல்.
பிள் - பிரி: Cf.L.
privo, to separate; E. privy, private; Fr., L. pars, a part; Gk. poro,
to share; E. part, portion.
பிள, பிடுங்கு. Cf.
A.S. brecan; Goth . brikan, Ger. brochen, E. breah;
Gael. bragh, a burst; L. frango, to break; E. fraction, fracture,
fragile, fragment, frail.
|