பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்40

Cf. A.S. mengan; Dut. mengelen, Ger. mangen, E. mingle, to mix.

முள் - முரு - மரு - மருவு = பொருந்து. மரு - மருமம் = பொருந்தும் மார்பு. மரு - மார் - மார்பு.

E. mammal, L. mammalis - mamma (kUk), the breast.

முள் - முள - மள - மண = பொருந்து, கலியாணம் செய். முள் - நுள் = விரல் நுனியாற் கிள்ளு. முள் - நுள் - நுண் = கூர்மை, நொய்ம்மை, சிறுமை.

L. min, small.

நுள் + பு - நுட்பு. நுட்பு + அம் - நுட்பம். நுள் - நுசு - நுசுப்பு = சிறுத்த இடை. நுள் - நுகு - நுகும்பு = மடல் விரியாத குருத்து. நுகு - நுகை = தளர், இளகு. நுகு - நெகு - நெகிழ். நுள் - நுளை - நுழை = நுண்மை. நுழை - நுழாய். நுழாய்ப் பாக்கு = இளம்பாக்கு. நுள் - நுள்ளல் = சிறிய கொசுகு. நுள் - நுளம் - நுளம்பு = கொசுகு. நுள்ளான் = நுள்ளினாற்போற் கடிக்கும் சிற்றெறும்பு. நுள் - நுறு - நுறுங்கு = (வி.) நொய்யாகு; (பெ.) நொய். நுறுங்கு - நொறுங்கு - நொறுக்கு. நுறுங்கு - நறுங்கு - நறுக்கு. நுறு - நொறு - நொறுவை - நொறுகை. நொறுவை - நொறுவல் = சிற்றுண்டி, பலகாரந் தின்னல். நுள்- நுரு - நொரு. நொருக்காய் = பருவத்தின்பின் காய்க்கும் சிறுகாய். நுறு - நூறு = (வி.) பொடிசெய், அழி; (பெ.) பொடி, பொடிபோல் மிகுந்த தொகை (100). நூறு - நீறு - நீற்று.

நுள் - நூ = சிறிய எள் (சூடா.), நூவு = எள் (பிங்.), நூ-நூல் - நோலை = எள்ளுருண்டை. நூ + நெய் - நூநெய் = எண்ணெய் (எள் + நெய்.) நூநெய் - நுநெ (தெ.) நுள் < நுணவை = மாவு, எள்ளுருண்டை.

நுள் - நொள் - நொய். நொள் - நொள்கு - ஞொள்கு = சுருங்கு, இளை. நொளுவல் = முற்றாமை, இளம்பாக்கு. நொளுக்கல் = முற்றாமை, இளம்பாக்கு. நொளுநொளு - லொளுலொளு = கூழ்போற் குழைந்திருந்தற் குறிப்பு. நொள் -நோள் - நோளை = நொய்யநிலை, நோயுண்ட நிலை. நொள் - நொடி = (வி.) பொடியாகு, நிலைதளர்; (பெ.) பொடி, புழுதி. நொள்ளாப்பு = தளர்ச்சி, வருத்தம்.

நொய் = நொறுங்கிய கூலம். நொய் - நொய்ம்மை = நுண்மை, சிறுமை, மென்மை. நொய்ய = சிறிய, அற்ப. நொய் - நொசு - நொசி. நொசு - நொச. நொசநொசத்தல் = உணவு நொளநொளத்தல், நொந்துபோதல். நொசி - நொசிவு = நுண்மை, நொய்ம்மை.

ஒ.நோ: ஊசு = கூர்மை, நுண்மை, நொய்ம்மை.

ஊசுதல் = உணவு நொந்து போதல். ஊசு - ஊசி. நொய் - நோய் - நோ- நோவு - நொவ்வு. நோய் = நொய்யநிலை, தளர்ச்சி, பிணி. நோ = நொய்யதாகு, மெலி, நொந்துபோ, தளர், வருந்து, பிணிவாய்ப்படு. ’நோவு நொடி’ என்னும் வழக்கை நோக்குக. நொவ்வு = மெலிவு. நோ = நொய்யாகு,மெலி, நொந்துபோ, தளர், வருந்து, பிணிவாய்ப்படு. ’நேரடி நொடி’ என்னும் வழக்கை நோக்குக. நொவ்வு - மெலிவு, வருத்தம், விரைவு (வேகத்தின் நுண்மை). நோ - நோப்பு - நோப்பாளம் = வருத்தம்.