செலவுக் கருத்து : ஏ = மேற்படு,
மேற்செல், அசை, செல், பொருந்து, அடை, அறி. ஏ - இய -
இயல். இய - இயங்கு - இயக்கம். இயங்கு = அசை, செல்.
இயக்கம் = அசைவு, செலவு, கிளர்ச்சி. இய - இயவு =
செல்லும் வழி. இய = அசை, செல். இயவு - இயவுள் =
வழிச்செலுத்தும் கடவுள். இயல் = (வி.). அசை, நட,
நிகழ், செய்யமுடி, செய்யப்படு, தோன்று; (பெ.)
நடக்கை, ஒழுக்கம், தன்மை, தன்மையைக் கூறும்
நூற்பகுதி, தோற்றம், இயற்கை. இயல் - இயல்வு -
இயல்பு = தன்மை, இயற்கை. இயல் + கை - இயற்கை. இயல்
- ஏல் - நிகழ், செய்யமுடி. ஏல் + படு - ஏற்படு = நிகழ்,
தோன்று, அமை. ஏற்படு - ஏற்பாடு.
இய + அம் - இயம் = தோற்றம், தோற்றம்
குறிக்கும் ஈறு. இயம் - அம் - ம்.
எ-டு: பண் - பண்ணியம், தாய் - தாயம்,
ஆசிரியன் - ஆசிரியம் (ஒரு வகைப் பா).
முத்துவீரியம் தொல்காப்பியம் முதலிய
நூற்பெயர்களும் ஒளஇயம்க ஈறு பெற்றவையே.
ஏ = செல். ஏ - யா - ஜா - ga
- go. யா + திரை - யாத்திரை. யாத்ரா -
ஜாத்ரா (இ.). ஒளதிரைக ஒரு தொழிற்பெயர் விகுதி.
Dan., A.S. gaa, gan, E.go, Ger. gehan, Skt. gam.
ஏ - ஏகு = செல். ஏ - ஏவு = செலுத்து, தூண்டு. ஏ
= செலுத்தும் அம்பு. ஏ - எய் = அம்பைச் செலுத்து.
எய்நர் - எயினர் = அம்பெய்யும் வேடர். எயில் =
அம்பெய்யும் மதில், மதில்.
ஏ - ஏய் = பொருந்து, ஒப்பாகு, உண்மை
போலச் சொல்லி ஏமாற்று. ஏய = பொருந்த, போல
(உவமவுருபு). ஏ - எய் = பொருந்து, அடை, அறி. கஎய்யா
மையே அறியா மையேக (தொல்.825) எய் - எய்து = அடை. ஏ -
இய - இயை - இசை - இணை = பிணை. இசை = பொருந்து,
ஒப்பாகு, இணங்கு, பொருத்து.
ச - ன - ண போலி . எ-டு : பூசை - பூனை - போடு.
A.S. potian, L. positus - pose - pono,
to place.
இணை - இணர் = கொத்து.
தன்மைப்பெயர்: ஏ = உயர்வு. நான்
என்னும் அகங்காரம் மாந்தனுக்கு இயல்பாக
வுண்மையால், முந்தியல் தமிழன் தற்பெருமையும்
தன்னலமும்பற்றி ஏகாரச் சுட்டால் தன்னைச்
குறித்தான்.
ஏன் - யான் - நான் (ஒருமை).
ஏம் - யாம் - நாம் (பன்மை).
வினாப்பெயர்: ஒரு பொருளை எதுவென்று
வினவும்போது, ஒரு கூட்டமான பொருள்களில் ஒன்றை
மேலெடுத்துக் காட்டச் சொல்வது போலிருக்கிறது.
இதனால், வினாக் கருத்து எழுகைச் சுட்டில்
தோன்றிற்று.
ஏ = ஏந்த (எது, எவை). ஏ- எ.
ஏது - எது - எதா - எதோ - எதோளி. எது -
எதன். ஏன் < ஏவன் < எவன். ஏம் < ஏவம் <
எவம். ஏன் - என் - என்னே - என்னை.
ஏ - எவ். எவள் - எவண்.
|