கொதி, குதி, துள்ளு, பொங்கு முதலிய பல
சொற்கள் ஒகர அல்லது உகார வடியாய்ப் பிறந்து,
மேலெழுதலைக் குறிப்பன.
உம்மை யிடைச்சொல்: பொருள்களை
மேன்மேல் அடுக்கிக் கூறுதல் உயர்ச்சியை அல்லது
பின்மையைக் காட்டுதலின், உகரவடியாய்க்
கூட்டிணைப்புச் சொல் பிறந்தது.
எ-டு: அழகனும் நம்பியும். ’உம்
உந்தாகும் இடனுமா ருண்டே’ (தொல். 776).
உந்து: Cf. E.
and.
செய்யும் என்னும் வாய்பாட்டு
எதிர்கால வினைமுற்றிலும் எதிர்காலப்
பெயரெச்சத்திலும் ’உம்’ ஈறு மேல் என்னும்
பின்மைப் பொருள்பற்றி எதிர்காலங் காட்டும்.
’செய்ததும்’ (செய்தவுடன்) என்பதில் ’உம்’ ஈறு ’மேல்
உடன்’ என்று பொருள்படும்.
செலவுக்கருத்து: ஓடு = உயர்வாய்
அல்லது வேகமாய்ப் போ. ஓடு - ஓடம் = நீர்மேலோடும்
தோணி. ஓடு - ஓடை = ஓடும் நீர்நிலை.
|