பக்கம் எண் :

118செந்தமிழ்க் காஞ்சி

7 எட

7
எட்டாம் நாள் விருத்தசேதனம்

சிமியோன் துதி

'அநாதுடனுகானு' என்ற மெட்டு

ப.

 
   
   என்னே! எனது பாக்யம் - இம்மையே  
   

து. ப.

 
   
   முன்னோன் மகன்வரு முன்னிறப்ப தில்லென  
   முன்னே யுரைகாணவின் றேசுவை

(என்னே)

   

உ.

 
   
   கோனே! உம்மடியேனை நற்சமாதானமாய் விடுகின்றீர்  
   ஏனோருக் கொளியாய் இனத்தில் மகிமையாய்  
   எல்லாருக்குமுன் ஆன ரட்சணியமுற

(என்னே)

8
தேவதூதன் யோசேப்புக்குச் சொல்வது

'ரகுநாயகா' என்ற மெட்டு

ப.

 
   
   எடுசேயனை யோசேப் உடனே ஏரோது கொல்ல வகை தேடுவான்  
   

து. ப.

 
   
   கொடுபோ எகிப்து தாயொடே பின்நான்  
   கூறுமட்டும் ஆங்கே குடிகூடவே.

(எடு)

   

உ.

 
   

(ஏரோது இறந்தபின் தேவதூதன் சொல்வது)

 
   
   நெடுநா ளாகின சேயைக் கொல்லவே நினைத்தார் இறந்தார்  

எழுந்தேக இனி

 
   விடுக யூதேயா ஏரோதின் மகன் வேந்த னானதினால் நாசரேத்தில்  

வாழ.

(எடு)