பக்கம் எண் :

126செந்தமிழ்க் காஞ்சி

 

உ.

 
     
   1. காணச் சுடர்மணியாம் காமர் முகத்தணியாம்  
  காட்சி நன்மாட்சி சுயாட்சி உரை சாட்சி

(ஆனந்த)

     
   2. ஏழையென் மீதிரங்கி யிருகண்ணுந் திறந்தவர்  
  ஈசன் மகேசன் பிரகாசன் கிறித்தேசன்

(ஆனந்த)

     
   3. சேற்றைப் பூசி விடுத்தார் சீலோவாம் நீரடுத்தே  
  சென்றேன்கை மொண்டேன் கண் கொண்டேன் உடனே   
 

கண்டேன்

(ஆனந்த)

     
   4. ஒருவர்க்கு மிவ்வற்புதம் உரையாவகை எவ்விதம்  
  ஓங்கும் நவாங்கம் தான்யாங்கும் உரைத்தாங்கும்

(ஆனந்த)

21
மருரூபமானது

‘கொலுமலரெகத‘ என்ற மெட்டு

    தோடி முன்னை (ஆதி)

 

ப.

 
     
  மகிமை யேசுபர மாதங்க மேனி  
     
 

து. ப.

 
     
  பகலென முகவொளி பனியுறை கட்டிநிகர்  
  வகையவர் தேகமும் வத்திரமும் ஒளியான

(மகிமை)

     
 

உ.

 
     
   1. மோசே எலியா ஏசு மூவரும் எருசலை  
  ஏசுமுடிவைப் பற்றிப் பேசினர் நேருமுந்திச்  
  சீடர்மா பேதுரு சிறந்த யோவான் யாக்கோபு  
  கூசவே பார்வை மாலைக் கொடிமுடி மேலே

(மகிமை)

     
   2. செஞ்சரன் நாத உந்தன் சித்தமேல் முக்கூடாரம்  
  விஞ்ச வறைவோ மென்றே வேண்டினன் பேதுருவும்  
  மஞ்சுமேல் நேச குமரனிவர் என்ற ஒலி  
  அஞ்சினர் சீடர் ஏசும் அபயமளித்தார்

(மகிமை)