|
8 |
| |
| ஊர்தோறும்பல்
உணவுப்பொருள் உண்மையில் ஏழைகளே வாங்கும் |
| நேர்மைவிலைக்
கடைகள்பல அண்மையில் நிலையாயிருந் தாலும் |
| நீர்மேவிய
சடையன்முனம் நீடியே ஆய்ந்ததமிழ் நைய |
| நீர்மையிலா
இந்தியொடு நாகரி நெருங்கிவரின் நன்றோ? |
| |
|
9 |
| |
| கற்றோருடன்
மற்றோரெலாங் கண்ணிய பணியாற்பெரு வருவாய் |
| வற்றாநல
வாழ்விற்பெறும் இன்பமே வழிவழியுற் றாலும் |
|
பொற்றாமரைக் குளமேற்சிவப் புங்கவன் ஆய்ந்ததமிழ் நைய |
|
முற்றாவியல் இந்தியொடு நாகரி முடுகிவரின் நன்றோ? |
| |
|
10 |
| |
|
பலகலைதேர் கழகமெனப் பைந்தமிழ் நாட்டிலுள வெல்லாம் |
|
மலைபோற்குவி நல்கைமகிழ் கூரவே மதிதோறுமுற் றாலும் |
|
கலகலென வொலிக்குங்கழற் கண்ணுளன் ஆய்ந்ததமிழ் நையக் |
| கலகம்விளை
இந்தியொடு நாகரி கறுவிவரின் நன்றோ? |