|    தாரணி
    யிலுயர் தமிழ்நாடு திருத் தாண்ட வம்புரி கற்பகக் காடு | 
  
  
    |    ஆரண
    முனிவர் மலைக்கோடு அதை அடைந்த வர்க்கும் பேரின்ப வீடு | 
  
  
    |   | 
  
  
    | 
     2  | 
  
  
    |   | 
  
  
    | 
      
    பொன்னும் மணியும் விளையும் நாடு ஞானப் பொற்புடன் சாலமோன் புகழ்நாடு | 
  
  
    |    கன்னலொடு
    செந்நெல் வளர்நாடு பல கற்ப காலமாய் விளங்கும் நாடு | 
  
  
    |   | 
  
  
    | 
     3  | 
  
  
    |   | 
  
  
    | 
      
    காவிய மிகுந்த கலைநாடு பண்டே கடல் வாணிகம் புரிந்த நாடு | 
  
  
    |    ஓவிய
    மிகுந்த திருநாடு மிக உன்னத கோபுர முள்ள நாடு. | 
  
  
    |   | 
  
  
    | 
     4  | 
  
  
    |   | 
  
  
    |    நாகரிகமே
    மிகுந்த நாடு மிக நடுநிலை யான தமிழ்நாடு | 
  
  
    | 
      
    ஏகமனமா யிருந்த நாடு மிக ஏதிலரை ஆதரித்த நாடு | 
  
  
    |   | 
  
  
    | 
     5  | 
  
  
    |   | 
  
  
    |    வள்ளுவன்
    பிறந்த திருநாடு பெரு வள்ளல்கள் திகழ்ந்த பெருநாடு | 
  
  
    | 
      
    மள்ளர் நடுகல்லி லுள்ளநாடு ஒரு மாத மூன்றுமழை பெய்தநாடு | 
  
  
    |   | 
  
  
    | 
     6  | 
  
  
    |   | 
  
  
    |    கம்பனும்
    பிறந்த தமிழ்நாடு கடுங் காள மேகமும் பிறந்தநாடு | 
  
  
    |    நம்ப
    னடியார்க்கு விளையாடித் திரு நடனமைந்து மன்று புரிநாடு |