பக்கம் எண் :

118மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தெருவிலுங் குடியிருக்கலாம்; எவரொடும் பழகலாம்; எக் கடைத் தெருவிலும் எப் பொருளும் விற்கலாம். பொருள் சேரும். பொருளாட்சி நிலை திருந்தும்.
 
   ஊர்க் கிணற்றில் எல்லாப் பெண்டிரும் தண்ணீர் எடுக்கலாம். ஊர்க் குளங்களில் எல்லாருங் குளிக்கலாம்.
 
   தீண்டும் ஒருவன் ஓர் ஊரில் தன்னந்தனியனாயிருந்தாலும், அவனுக்குப் பாதுகாப்புண்டு; ஆயின் தீண்டாதவர் நூற்றுக் கணக்கினரேனும் அச்சத்திலேயே வாழ வேண்டியிருக்கும். ஆதலால், தீண்டாமை விலக்கே தாழ்த்தப்பட்டவர்க்கு அரசு செய்யும் உண்மையான நன்மையாகும்.
 
   தாழ்த்தப்பட்டவரைத் தாழ்த்தப்பட்டவ ரென்று சொல்வதே மானக்கேடாம். அதினும் பிறர் சொல்லாது தாழ்த்தப்பட்டவரே சொல்லிக்கொள்வது தம்மைத் தாமே தாழ்த்துவதாகும். ஆதலால், தாழ்த்தப்பட்ட (அரிசன) மாணவர் விடுதியென்று தனியாக இருப்பதை உடனே நீக்கிவிட்டு மேல் வகுப்பு மாணவர் விடுதியொடு சேர்த்துவிடல் வேண்டும்.
 
   தாழ்த்தப்பட்டவர்க்குக் கட்டிக் கொடுக்கும் குடியிருப்பு களும், ஊரினின்று நீங்கியிராது ஏனை வகுப்பார் குடியிருப்பு களோடு சேர்ந்தேயிருத்தல் வேண்டும்.
 
   அரிசனம் என்று பெயர் மாற்றியவுடன், தீண்டான் தீண்டுவானாகிவிடான். ஒரு குழந்தை தன் தாயிடம் தேங்காய் கேட்டு அழுதது. அவள் "அது கக்கா" என்று சொன்னாள். உடனே அது கக்கா கேட்டு அழுதது. ஆகவே, பெயர் மாற்றத்தாற் பொருள் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்பதை அறிதல் வேண்டும்.
 
   மேலும், அரிசனம் (ஹரிஜன்) என்றால் திருமால் மக்கள் அல்லது திருமாலடியார் என்றே பொருள்படும். ஆதலால், தாழ்த்தப்பட்டவர்க்கும் சிவவணக்கத்தார்க்கும் ஏற்காது.
 
   தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவரென்று காலமெல்லாஞ் சொல்லிக்கொண்டிருத்தல் கூடாது. அதுவே ஒரு குலப் பிரிவினையாகும். பத்தாண்டு முடிந்தபின், தாழ்த்தப்பட்டோர் ஏனையர்போல் தாழ்த்தப்படாதவராய்த் தம் முயற்சியாலேயே வாழ்தல் வேண்டும்.
 
   ஒரு பிள்ளைக்குக் காலமெல்லாம் பெற்றோர் உணவூட்டிக் கொண்டிரார். பொருள் தேடும் பருவம் வந்தபின்,