பக்கம் எண் :

172மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

  கூட்டியம் இன்றேல், செல்வர் திருமண விழாக்களும் அரசினர் ஊர்வலங்களும் கொண்டாட்டங்களும் படைப் பயிற்சியும் சிறிதும் சிறப்புறா.
 
   காந்தியடிகளும் நேருவும் இங்கிலாந்திற் கல்விபயின்ற துடன், இன்றும் குடியரசுத் தலைவர் மக்கள் அங்கேயே மேற்கல்வி கற்கின்றனர்.
 
   குடியரசுத் தலைவர்க்கும் முதலமைச்சர்க்கும் இங்கிலாந் திலும் அமெரிக்காவிலுமே மருத்துவம் நடைபெற்று வருகின்றது.
 
   ஆங்கிலத்தை வெறுப்பதாக நடிக்கும் இந்தி வெறியர் உண்மையில் தன்மானமுள்ளவராயின், ஆங்கிலர் புதுப் புனைந்த இயங்கி (car), தொடர்வண்டி, நீராவிக்கப்பல், வானூர்தி முதலிய ஊர்திகளிற் செல்லாது, மாட்டுவண்டி குதிரை வண்டிகளிலும் தண்டுவலிக்கும் நீர்க்கலங்களிலுமே வழிச்செல்ல வேண்டும்.
 
   இந்தியா விடுதலை பெற்றபின், சர்ச்சில்
(Churchill) வியக்குமாறு, நேரு பிரித்தானியப் பொதுநல்வாழ்வு நாடு களுடனேயே (British Commonwealth of Nations) இந்தியாவை இணைத்துக்கொண்டார்; ஆங்கிலர் துணையின்றேல், அற்றை நிலையில் இந்தியாவிற்குப் பாதுகாப்பில்லை யென்றுங் கண்டார்.
 
   இரசியாவேனும் சீனமேனும் இந்தியாவைக் கைப்பற்றி யிருந்திருப்பின், இந்தியா ஒருகாலும் விடுதலையடைய வழியிருந்திருக்காது. இதைப் போலந்து திபேத்து நாடுகளின் வரலாறு தெரிவிக்கும்.
 
   இன்று தம் தந்தையினுஞ் சிறப்பாக ஆண்டு வரும் இந்திராகாந்தியம்மையாரும், தம் பதவியையும் ஆற்றலையும் பெறுதற்குத் துணையா யிருந்தது ஆங்கிலமே.
 
   அவர் பாட்டனாரான மோத்திலால் நேரு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற உயர்மன்ற வழக்கறிஞராக இருந்ததனால், ஆங்கிலத்தின் அருமை பெருமைகளையும் இன்றியமையாமை யையும் உணர்ந்து, அலகாபாத்திலிருந்த ஆனந்த பவன் (இன்ப நிலையம்-
Anand Bhavan) என்னும் தம் வளமனையை, இரு பாலரும் வெவ்வேறாக வழங்குமாறு இரு பகுதியாக்கி, ஆடவர் வழங்கும் பகுதிக்கு ஆங்கிலத் துறை (English Department) என்றும், பெண்டிர் வழங்கும் பகுதிக்கு இந்தியத் துறை (Indian