பக்கம் எண் :

நடுவணரசின் கடமை175

  ஆங்கிலத்தின் இன்றியமையாமையை உணர்ந்து கொண்டும், அதை அல்லும் பகலும் நன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டும், ஆங்கிலம் தமக்குத் தேவையில்லாதது போன்றும், தாம் ஆங்கிலம் பேசுவதால் அம் மொழிக்குப் பெருமையளிப் பது போன்றும், ஏன் நடிக்கவும் ஏமாற்றவும் வேண்டும்? ஆங்கிலம் உலகில் ஒப்புயர் வற்ற மொழி. அதனால் அதைப் பேசுவோர்க்கேயன்றி, அதைப் பேசுவோரால் அதற்குப் பெருமை யில்லை.

  இந்திய மொழிகளுள் எதிற் பேசினும் எழுதினும், ஆங்கிலக் கருத்தின்றிப் பேசுதலும் எழுதலும் இக்காலத்தில் இயலாது; இயலினுஞ் சிறவாது. ஆங்கிலம் என்ற பெயருமறியாத கல்லா மக்கள் உள்ளத்திலும், ஆங்கிலக் கருத்து நுண்ணிதாக இரண்டறக் கலந்துள்ளது. ஆதலால், ஆங்கிலங் கற்றோர் அதனை அகற்றுவது இயலாமையினும் இயலாமை யாகும்.

  ஆதலால், ஆங்கிலமே என்றும் இந்திய ஆட்சிமொழி யாகவும் உயர்நிலைக் கல்விமொழியாகவும் இருத்தல் வேண்டும்.

4. சம்பளத்திட்டம்


   அரசியல் வினைஞர் சம்பள உச்சவரம்பு 5000 உருபா என்று திட்டஞ் செய்து, குடியரசுத் தலைவர் சம்பளம் 5000 உருபா என்றும், ஆள்நர் (Governor) சம்பளம் 3000 உருபா என்றும், ஏனையோர் சம்பளமெல்லாம் 2000 உருபாவும் அதன் கீழும் என்றும், வகுத்தல் வேண்டும்.

  உயர்ந்த சம்பளம் வழங்கிக்கொண்டு, அதில் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்கச் சொல்வது நன்றன்று.
நடுவணரசு ஊழியர்க்கும் நாட்டரசு ஊழியர்க்கும், ஒத்த பதவிக்கு ஒத்த சம்பளமே வழங்குதல் வேண்டும். நடுவணரசி னும் நாட்டரசு தாழ்ந்த தென்னும் உணர்ச்சியை உண்டுபண்ண லாகாது.
போர்ப்படி, பஞ்சப்படி முதலிய குறித்தகாலப் படிகளைப் போரும் பஞ்சமும் நீங்கியபின் நிறுத்திவிடலாம். அகவிலைப்படி, அதிகப்படி முதலிய விலைவாசி பற்றிய படிகளை, விலையிறங்கவிடின் அடிப்படைச் சம்பளத்தொடு சேர்த்துவிடுதல் வேண்டும்.
தனிப்பட்டவர் கல்வி நிலையங்களிலும் தொழிற்சாலை களிலும் சம்பளங்கொடுக்கும் நிலைமை கெட்டுவிடின்,