பக்கம் எண் :

உலகக் கூட்டரசு197

6. ஒன்றிய நாட்டினங்களின் உறுப்பு நாடுகட்குள்ளும், இனம் பற்றியும், மதம் பற்றியும், அரசியற் கொள்கை பற்றியும், இடம் பற்றியும், வெவ்வேறு தன்னலக் குழுக்கள் இருந்து ஒற்றுமையைக் குலைத்தல்.

7. இரு பெருவல்லரசுகளொடும் சிற்சில சிறுவல்லரசு நாடுகள் சேர்ந்திருக்க, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள பல வல்லாவரசுகள் அல்லது வளரும் நாடுகள் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு, அணிசேரா நாடுகள் எனவும் 3ஆம் உலகம் எனவும் பெயர் பெற்று, ஒரு தனிக் கூட்டாக இயங்கி வருதல்.

இங்ஙனம் இன்று முப்பேரணிகளாயிருப்பவை, சீனம் தலையெடுத்த பின் நாற்பேரணிகளாயினும் ஆகலாம்.

8. நாடுகளிடைப்பட்ட பிணக்கத்தைத் தீர்க்கும் ஆற்ற லின்மை.

இசரவேல் பலத்தீன
(Palestine) மக்கட்கு நாடு கொடா மையொடு, எகிப்தின் ஆள்நிலத்தையும் கவர்ந்துள்ளது. கவர்ந்த நாட்டுப்பகுதிகளைவிடச் சொல்லின், அரபி நாடுகளெல்லாம் கூடித் தன்னை அழித்துவிடும் என்று அஞ்சுகின்றது. இந் நிலையில், இசரவேல் கவர்ந்த நிலங்களையெல்லாம் அதினின்று விலக்கவும், அரபி நாடுகளால் அதற்கு அழிவு நேராவாறு அரணாயிருக் கவும், ஒன்றிய நாட்டினங்கட்கு ஆற்றலில்லை. பல நாடுகள் அண்மை நாடுகளின் பகைமையால் அஞ்சியே வாழ்கின்றன.

9. இனவெறி மதவெறி மொழிவெறி கட்சிவெறி முதலிய பல வகை வெறிகொண்டு சிலநாடுகள் ஒருசார் மக்கட்குச் செய்யுங் கொடுமைகளையும் அட்டூழியங் களையும் தடுக்காமை.

இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் இவ் வெறிகட்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.

10. படையாட்சியைத்
(Stratocracy) தடுக்காமை.

  நல்ல மந்திரியாதற்கு எவ்வகுப்பான் தகுந்தவ னென்று வினவிய ஒரு சோழனுக்கு.